Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலுக்கு பல நன்மைகளை வாரிவழங்கும் வெங்காயத்தாள் !!

Webdunia
வெங்காயத்தின் இலைதான் வெங்காயத்தாள் என அழைக்கப்படுகிறது. இதனை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக நோய்கள், மாதவிலக்கு கோளாறுகள், குடற்புண் போன்ற பிரச்சனைகள் தீரும்.

வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, வைட்டமின் ஏ, வைட்டமின் கே போன்ற பல வைட்டமின்கல் அடங்கியுள்ளன.
 
வெங்காயத்தாளில் உள்ள வைட்டமின் கே-வானது இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதைத் தடுத்து சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது.
 
வெங்காயத்தாளாவது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.
 
வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் உள்ளது. வெங்காயத்தாள், பொடுதலை, வெந்தயம் மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் ரத்த மூலம் குணமாகும்.
 
உணவுகளில் அதிகமாக பயன்படுத்தப்படும் ஸ்ப்ரிங் ஆனியன்ஸ் என அழைக்கப்படும் வெங்காயத்தாள் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கிறது. மேலும் இதில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு அற்புதமான கீரையாகும்.
 
வெங்காய தாளுடன் சிறிதளவு இஞ்சி சேர்த்து சாப்பிட்டால் நல்ல பசி ஏற்படும். வெங்காயத் தாளை அரைத்து அதில் ஒரு கிராம் ஜாதிக்காய் பொடியை கலந்து சாப்பிட்டால் காம உணர்வு அதிகரிக்கும்.
 
வெங்காயத்தாள், துத்தி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து அதில் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண், வாய் புண் குணமாகும்.
 
வெங்காயத்தாள் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தாளில் உள்ள பாக்டீரிய எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் அளிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments