Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இருமல் தொல்லையில் இருந்து நமக்கு நிவாரணம் தரும் ஓமம் !!

Webdunia
சனி, 18 டிசம்பர் 2021 (09:56 IST)
அஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு ஓர் மிகச்சிறந்த இயற்கை மருந்தாக ஓமம் பயன்படுத்தப்படுகிறது. உடல் எடை அதிகரிக்க ஜீரணக்கோளாறு தான் காரணம். உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் ஓமம் சாப்பிட்டால் நல்லது.

ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு ஓமம் ஒரு சிறந்த மருந்துப் பொருளாக விளங்குகிறது. நுரையீரலுக்கான காற்றோட்டத்தை அதிகரிக்க ஓமம் உதவுகிறது. 
 
தேவையற்ற கொழுப்பு குறையும். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும்.
 
ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் .
 
ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும். உடல் சுறுசுறுப்பு பெரும். இதனால் அதிக நேரம் உடற்பயிற்சி செய்ய முடியும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வைட்டமின் டி குறைபாட்டால் எலும்புகள் பிரச்சனை ஏற்படுமா?

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments