Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை விரட்ட....!

Webdunia
கோடை காலத்தில் ஏற்படும் வியர்வை நாற்றத்தை விரட்ட, இயற்கை முறைகளின் மூலம் தீர்வு காணலாம். வியர்வையினால் ஏற்படும் துர்நாற்றத்தை எளிதில்  விரட்டலாம்.
கோடை வெப்பத்தால் உடலில் இருந்து வியர்வை அதிகம் வெளியேறும். எனவே நாம் மிகவும்சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் வியர்வை துர்நாற்றத்தினால் யாரும் உங்கல் அருகில் கூட வரமாட்டார்கள்.
 
1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை அக்குளில் தடவி சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
ஆப்பிள் சீடர் வினிகரை பஞ்சு உருண்டையில் நனைத்து, அதை அக்குளில் தடவி 2 நிமிடம் கழித்து நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்தால்  பலன் கிடைக்கும்.
தினமும் குளிக்கும் முன் ஒரு துண்டு எலுமிச்சயை அக்குளில் தேய்த்து அது நன்கு காய்ந்த பின்பு குளிக்க வேண்டும். இப்படி தினமும் செய்தால் உடல் துர்நாற்றம் விரைவில் மறையும்.
 
சந்தன பவுடரை எடுத்து அதில் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி நன்கு காய வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து  வர வியர்வை நாற்றம் மற்றும் அக்குளில் உள்ள கருமை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?

பாம்பு போல நாக்கை வெட்டி டாட்டூ: இதனால் என்ன ஆபத்து?

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் சைனஸ் பிரச்சனை.. தீர்வு என்ன?

பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனையா?

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments