Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெந்தய கீரையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

Webdunia
வெந்தயக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. வயிற்றுப்புண் உள்ளவர்கள் உண்டால் விரைவில் குணமாகும். கண்ணுக்கு இந்தக் கீரை நல்லது. உடலுக்கு நல்ல ஊட்டத்தை அளிக்கும்.

இந்தக் கீரையைத் தொடர்ந்து 40 நாட்களுக்குச் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும். எனவே, நீரிழிவு உள்ளவர்கள் வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிடுவது  நல்லது.
 
வெந்தயக் கீரை ஜீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு  வர, காசநோயும் குணமாகும் என்று கூறப்படுகிறது. உட்சூடும் வறட்டு இருமலும் கட்டுப்படும். குடல் புண்கள் நீங்கும்.
 
வெந்தயக் கீரையை வேகவைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாவதோடு, உடல் முழுவதுமே சுத்தமாகும். மேலும் இந்த கீரையினை  அரைத்து நெய் சேர்த்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால் தொண்டைப்புண், வாய்ப்புண் ஆகியவை ஆறும்.
 
வெந்தயக்கீரையை வெண்ணெயிட்டு வதக்கி உண்டால் பித்தக் கிறுகிறுப்பு, தலை சுற்றல், வயிற்று உப்பிசம், பசியின்மை, ருசியின்மை ஆகியவை குணமாகும். இக்கீரை மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் குணமாக்குகிறது.
 
நீண்ட நேரம் அமர்ந்திருந்து வேலை செய்ய முடியாமல் இடுப்பு வலிப்பவர்கள் வெந்தயக் கீரையுடன் கோழி முட்டை மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து நெய்யில் வேகவைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர, இடுப்பு வலி நீங்கும்.
 
வெந்தயக் கீரை நீரிழிவு சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறது. இதில் உள்ள ஆன்டிஆக்சிடன் ப்ராப்பர்ட்டி வயது முதிர்ச்சியைத் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments