Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்பிள் தோலில் உள்ள சத்துக்களும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளும்...!

Webdunia
ஆப்பிள் மட்டுமல்ல ஆப்பிளின் தோலிலும் ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. ஆப்பிளை சிலர் தோலை சீவிவிட்டுதான் சாப்பிடுவார்கள். ஆனால் ஆப்பிளைவிட அதன் தோலில்தான் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஆப்பிள் தோலில் உள்ள சத்துக்கள்:
 
ஆக்ஸிஜனேற்றிகள் ஆப்பிள்களில் அதிகம். இது நோயிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால்  பயிற்சியின்போது இழந்த உடல்வலிமையைப் பெற முடியும்.
 
ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் கண்புரை ஏற்படும் அபாயத்தை குறைத்து கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
ஆன்டி-ஆக்சிடண்டுகளும், ஃபிளாவனாய்டுகளும் ஆப்பிள் பழத்தோலில் அதிகம். இது இதய பிரச்சினைகளைச் சரிசெய்யும். ஆப்பிளில் கால்சியம், பொட்டாசியம்,  பாஸ்பரஸ், மற்றும் இரும்பு ஆகியவை நிறைந்துள்ளன. அவை எலும்புகளை வலுவூட்டும். வலுவாக மாறும்.
 
ஆப்பிளின் தோலில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் அவை சிறுநீரக கற்கள் உருவாவதையும், உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாகுவதையும் தடுத்து உடல்பருமனை அதிகரிக்காமல் தடுக்கிறது.
 
ஆராய்ச்சிக்காக வரும்போது உயர் இரத்த அழுத்தத்தின் சிக்கலைக் கட்டுப்படுத்த இது உதவும். ஆப்பிளில் பேசினின் என்ற ஒரு இரசாயன உள்ளது. இது  கொழுப்பு மற்றும் இரத்த சர்க்கரை அளவு குறைக்க உதவுகிறது. அதேபோல் ஆப்பிளின் தோலில் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமிலம் நிறைந்து  காணப்படுகிறது.
 
ஆப்பிளின் தோலில் உள்ள கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் ஆகியவை கர்ப்ப காலத்தில் இரத்த சோகைக்கான ஆபத்தை குறைக்க  உதவுகிறது. மார்பகப் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
 
ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

அடுத்த கட்டுரையில்
Show comments