Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!

Webdunia
சித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக கூறுகிறது. இம்மரத்தின் பல பகுதிகள் மூலிகையாகப் பயன்படுகின்றது. அகத்திக் கீரையில் 8.4 விழுக்காடு புரதமும் 1.4 விழுக்காடு கொழுப்பும், 3.1 விழுக்காடு தாது உப்புகளும் இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். மேலும் அகத்திக்கீரையில் மாவுச் சத்து,  இரும்புச் சத்து, வைட்டமின்(உயிர்ச்சத்து) ஏ ஆகியவையும் உள்ளன.
* அகத்திக் கீரையை சாறுடன் சிறிதளவு தேன் கலந்து நீர்க்கோவை பிடித்துள்ள குழந்தைகளுக்கு உச்சித் தலையில் தடவினால் குணமாகும். காயங்களுக்கு இலையை அரைத்துப் போட புண்கள் ஆறும்.
 
* அகத்திக் கீரையை சாப்பிடுபவர்களுக்கு பித்த சம்பந்தமான நோய்கள் நீங்குவதுடன் உணவு எளிதில் ஜீரணமாகும். வாரத்திற்கு ஒரு முறையாவது அகத்திக்  கீரை சாப்பிட்டு வர, உடல் உஷ்ணம் குறைந்து கண்கள் குளிர்ச்சி பெரும்.
 
* அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. இலைகளை உலர்த்தி பொடி செய்து காலை,  மாலை இருவேளை பாலில் அரைக் கரண்டி அலவு கலந்து குடித்து வந்தால் வயிற்றுவலி குணமாகும்.
 
* தொண்டை புண், தொண்டை வலி ஆகியவை உள்ளவர்கள் அகத்தி கீரையை பச்சையாக மென்று சாப்பிட்டால் விரைவில் தொண்டை பிரச்சனை குணமாகும். அகத்தி கீரை வயிற்றில் உள்ள புழுவை கொள்ளும், மேலும் மலச்சிக்கலை தீர்க்கும்.
 
* உயர்ந்த இரத்த அழுத்த பிரச்சனை இருப்பவர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரையை உணவில் சேர்த்து கொண்டால் இந்த பிரச்சனையிலிருந்து   விடுபடலாம்.
 
* தொண்டை வலி மற்றும் குடல் புண் பிரச்சனையை சரி செய்ய அகத்திக் கீரை பயன்படுகிறது. மதிய வேளையில் இதை சாப்பிட்டு வந்தால் அல்சர் மற்றும்  உடலில் உள்ள பித்தம் குறையும்.
 
* அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர்  தடையில்லாமல் போகும்.
 
* அகத்திக் கீரையை வெயிலில் காய வைத்து பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் மார்பில் ஏற்படும் வலி முற்றிலுமாக குறையும். அகத்திக் கீரையை தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். பார்வை தெளிவாகும்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

பன்னீர் ரோஜாவில் இத்தனை மருத்துவ குணங்களா?

மனநலத்தை பாதிக்கிறதா ‘Work From Home’? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments