ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!

ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!

Webdunia
விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பல உள்ளன, அதில் மிக எளிதாக மிகவும் பயனுள்ள மூலிகை ஜாதிக்காய்.  தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.


 
 
* ஜாதிக்காய் இது உடலில் ஒருவித போதையை ஏற்படுத்தி பாலுணர்வை தூண்டுகிறது. ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ செய்து சாப்பிடலாம்.
 
* ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில் வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.
 
* ஜாதிக்காயில் எளிதில் ஆவியாகும் எண்ணெய் 15 சதவிகிதம் உள்ளது. ஜாதிபத்ரியிலும் எளிதில் ஆவியாகும் எண்ணெய்கள் உள்ளன. இவை ஜாதிக்காயில் காணப்படும் அதே எண்ணெய் வகைகள் என்றாலும் இவற்றில்  மிர்ட்டிசின் அதிக அடர்த்தியாக உள்ளது.
 
* ஜாதிக்காயை சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும். முகம் பொலிவடையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம். ஜாதிக்காயினை அரைத்து தயாரித்த பசை தேமல், படை போன்ற தோல் வியாதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
 
* அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிற்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது. ஜாதிக்காய் அதிகம் சாப்பிட்டால் மலச்சிக்கல் உண்டாகும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள எவ்வளவு நேரம் தூங்க வேண்டும்?!.. ஆய்வில் தகவல்!..

பில் போடும் பேப்பரால் ஆண்களுக்கு வரும் ஆபத்து!.. ஆய்வில் அதிர்ச்சி!...

கோடையில் வரும் நோய்கள்!.. பாதுகாப்பாக இருப்பது எப்படி?...

வெயில் நேரத்தில் எதையெல்லாம் சாப்பிடக்கூடாது?.. வாங்க பார்ப்போம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments