Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லை - வீட்டிலேயே இருக்கு பியூட்டி பார்லர்

பியூட்டி பார்லர் போக வேண்டிய அவசியம் இல்லை - வீட்டிலேயே இருக்கு பியூட்டி பார்லர்
கடலை மாவு
 
கடலைமாவு, பால் ஏடு, கஸ்தூர் மஞ்சள் தூள் மூன்றையும் கலந்து முகம், கழுத்து மற்றும் கை கால்களில் தடவி ஆறவிட்டு கழுவினால் தோல் முருதுவாகவு பளிச்சென்றும் இருக்கும்.


 
 
தயிர்
 
தயிரில் உள்ள லாக்டிக் ஆசிட், சருமத்தில் உள்ள கருமையை நீக்கும் தன்மை கொண்டது. ஆகவே தினமும் தயிரை முகம் மற்றும் கை, கால்களில் தடவி ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால், முகம் பொலிவாகும். முக்கியமாக, இந்த செயலை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.
 
பால் ஏடு
 
வறண்ட சருமத்திற்கு பால் ஏடு மற்றும் குங்குமப்பூ நல்ல பலன் தரும். இவை இரண்டையும் கலந்து முகத்தில் போட்டு, வெதுவெதுப்பான நீரி கழுவினால் விரைவில் நிறம் மாற்றம் தெரியும்.
 
பப்பாளி
 
பப்பாளி கூட ப்ளீச்சிங் தன்மை கொண்டது. அதற்கு பப்பாளித் துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து, 2-3 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.
 
எலுமிச்சை 
 
எலுமிச்சை மற்றொரு அற்புதமான ப்ளீச்சிங் தன்மை கொண்ட பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றினை நீரில் கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, சுத்தமான குளிர்ந்த நீரில் கழுவி, பின் மாய்ஸ்சுரைசர் தடவவும். இப்படி தினமும் செய்து வந்தால், முகத்தின் பொலிவு மேம்படும்.
 
கஸ்தூரி மஞ்சள்
 
தென்னிந்திய பெண்களின் அழகின் ரகசியமே மஞ்சள் தான். மேலும் மஞ்சளில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் ஆன்டி-செப்டிக் தன்மை உள்ளதால், இந்த மஞ்சள் தூளை பாலில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதன் மூலம் முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
 
முட்டை
 
முட்டை, மஞ்சள் தூள், மைதா மாவு இவற்றை கலந்து முகத்தில் திக்காக தடவி காயவைத்து உறித்தால் சிறிய முடிகளோடு சேர்ந்து வந்துவிடும். இதனால் தேவையற்ற முடிகளை நீக்க முடியும்.
 
கற்றாழை
 
கற்றாழை ஜெல்லை தினமும் முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனாலும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.
 
ஆரஞ்சு
 
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இவை சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும். அதற்கு 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், 1/2 கப் ஆரஞ்சு ஜூஸ் கலந்து, முகம், கை, கால்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
 
சந்தனம்
 
அதிக எண்ணெய் பசை உள்ள சருமத்திற்கு சந்தனம் ஏற்றது. சந்தனத்தை பன்னீர் கலந்து முகத்தில் மாஸ்க் போட்டு காயவத்து கழுவினால் எண்ணெய் வசை நீக்கி முகம் ப்ரஷ்சாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil