Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும பிரச்சனைகளுக்கு நல்ல நிவாரணம் தரும் வேப்ப எண்ணெய் !!

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (15:46 IST)
வேப்ப எண்ணெய்யில் ஆன்டி ஆக்சிடன்ட் சத்துகள் அதிகம் இருக்கின்றன. வேப்ப எண்ணெய்யை வாரத்திற்கு ஒரு முறை தோலில் நன்கு தடவிய பின்பு குளித்து வந்தால் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவதை தடுத்து, இளமை தோற்றத்தை அதிகரிக்கும்.


வேப்ப எண்ணெய்யில் மிகவும் சக்தி வாய்ந்த வேதிப்பொருட்கள் உள்ளன. வேப்ப எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபாயம் குறைவு.

அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணெய்க்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்தும் சக்தி வேப்ப எண்ணெய் பயன்படுகிறது.

வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக் கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.

கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களாகிய தேங்கியிருக்கும் நீர்நிலை தேங்காய் ஓடுகள் போன்ற இடங்களில் வேப்ப எண்ணெய்யை தெளித்து வந்தால் கொசுக்களின் உற்பத்தி குறைந்து கொசுத்தொல்லை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவித்த முட்டை Vs ஆம்லெட்: ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?

வெண்டைக்காய்: ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகளுக்கு பலன்!

பெண்களுக்கு அதிக இதய நோய் பாதிப்பு! விழிப்புணர்வு தேவை..!

எடை குறைப்பிற்கு சைவ உணவே சிறந்தது: புதிய ஆய்வு முடிவு!

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments