Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்த உதவும் இயற்கை பொருள் சீயக்காய்!!

Webdunia
சீயக்காய் என்பது நம் கூந்தலையும், தலைச்சருமத்தையும் பராமரிக்க காலம் காலமாக நாம் பயன்படுத்தி வரும் பொருட்களில் ஒன்றாகும்.  ஏராளமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் வந்தாலும், கூந்தல் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு இன்றளவும் பல பெண்கள் சிகைக்காய்  பயன்படுத்துவதையே விரும்புகின்றனர்.
சிகைக்காய் கூந்தல் பராமரிப்பு மற்றும் கூந்தல் வளர்ச்சிக்கு சித்த மருத்துவம் மற்றும் ஆயிர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும். எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது சிகைக்காய் பொடி தேய்க்க தேகத்தில் உள்ள அழுக்கை அகற்றும். சொறி, சிரங்கு முதலியவற்றை நீக்கும்.
 
தலைக்கு தேய்த்து குளித்து வர கூந்தல் செழிப்பாக வளர செய்யும். பொடுகை நீக்கும். சிகைக்காயை சுட்டு கரியாக்கி நல்லெண்ணெய்யில் குழைத்து மண்டை கரப்பான், தேக கரப்பான் இவைகளுக்கு தடவி வர ஆறும்.
 
மயிர்கால்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வைட்டமின் டி மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்களை அளித்து, இது தலைச்சருமத்திற்கு  புத்துணர்ச்சி அளிக்கும்.
கூந்தலின் ஆரோக்கியம் மேம்படும் இது மற்ற மூலிகைகளை மற்றும் இயற்கை சாறுகளுடன் நன்றாக ஒன்றி விடும். அதனால் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு பயனாக அமையும்.
 
முடியின் நிறத்தை தக்க வைக்கும் கூந்தலுக்கு சாயம் போடுவதற்கு முன், அது இயற்கை சாயமாக இருந்தாலும் கூட, கூந்தலை சீயக்காய் கொண்டு கழுவ வேண்டும். இதனால் சாயம் அதிக நேரம் ஊறி, நீண்டு நிலைக்கும். பொடுகை தடுக்கும் பொடுகை எதிர்த்து போராடவும்  சீயக்காய் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments