Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோரியாசிஸ் பாதிப்பை சரிசெய்ய உதவும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
தோல் சிவந்து தடித்துப்போய் பாதிக்கப்பட்ட இடங்களில் வெள்ளி நிறத்தில் செதில் செதிலாக உதிரும். சிறிய வட்ட வடிவத்தில் தோன்றும். இந்த வட்ட அமைப்பால், நமைச்சல் ஏற்பட்டு அரித்தல் சீழ் அல்லது இரத்தம் வரும்.

சோரியாசிஸ் புண்களில் அரிப்பும் நமைச்சலும் தோன்றலாம். வட்ட செதில் அமைப்பு இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். நீர்த்த எலுமிச்சம் பழச் சாற்றை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவலாம். 
 
வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக்கி, நெய்யில் வறுத்துச் சாப்பிடலாம். முட்டைகோஸ் சாற்றை தினமும் ஒரு கோப்பை அருந்தலாம்.
 
உலர்ந்த வேப்ப இலைகளை நன்றாக பொடி செய்து சுத்தமான பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளவும். இந்த பொடியில் 5 கிராம் அளவு எடுத்து, ஒரு கோப்பை  தண்ணீரில் கலந்து தினமும் இருவேளை அருந்தி வரவும். இத்துடன் அரைத்த மஞ்சள் பொடியையும் சேர்த்து கலந்து அருந்தி வரலாம்.
 
புங்கத் தைலத்தினை வெளிப்பூச்சாக தடவி வர நல்ல பலன் கிடைக்கும். உணவு கொழுப்பு, மாமிச புரதம், சர்க்கரை இவற்றைக் குறைக்கவும். கடல் உப்புக்கு பதில் பாறை உப்பைப் பயன்படுத்தலாம். மது அருந்துதல் கூடாது.
 
தினமும் காலையில் 1 டம்ளர் தேன் அல்லது சர்க்கரை கலந்த தக்காளிச் சாறை அருந்தி வர இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, தோல் வியாதிகள் அணுகாது. சிறிது  நேரம் காலை வெயிலில் உடலில் படுவதால், சோரியாசிஸ் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments