Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலைமுடி உதிர்வை தடுக்கும் இயற்கை முறையிலான பழ ஹேர் மாஸ்க்...!!

Webdunia
மயிர்கால்களை வலிமையாக்கும் சில ஹேர் பேக்குகளை வாரம் ஒருமுறை போட்டு வருவதன் மூலம் பலவீனமாகி உதிரும் முடியை  வலிமையாக்கலாம்.
வாழைப்பழத்தில் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகம் உள்ளது. இது மயிர்கால்களுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கி முடியின்  வலிமையை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய வாழைப்பழத்தை மசித்து, அதனை ஸ்கால்ப்பில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த  நீரில் நன்கு அலச, முடியின் வலிமை அதிகரித்து உதிர்வது குறையும்.
 
கொய்யாவில் இருக்கும் வைட்டமின் ஏ, கூந்தல் வளர்வதிலும், பாதிப்படைந்த செல்கள் புதுப்பிக்கப்படவும் உதவுகிறது. அதற்கு நன்கு கனிந்த  கொய்யா பழத்தை எடுத்துக் கொண்டு, நன்கு மசித்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை விட்டு கலந்து, தலைக்கு நன்கு தடவி, 30 நிமிடம்  ஊற வைக்க வேண்டும். பின் அதனை மைல்டு ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனால் பொடுகு இருந்தாலும் போய்விடும்.
 
பப்பாளி ஒரு இயற்கையான சரும செல்கள் மற்றும் கூந்தலை நன்கு சுத்தம் செய்யும் பொருள். அத்தகைய கனிந்த பப்பாளியுடன், பால், தயிர்  சேர்த்து, நன்கு நைசாக மசித்து, பின் அவற்றை கூந்தலுக்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிக்க வேண்டும்.
 
மேற்கூறியவையெல்லாம் வீட்லேயே செய்யக்கூடிய ஹேர் மாஸ்க். இந்த மாஸ்க் போடும் போதெல்லாம், தலையில் கொஞ்சம் எண்ணெய் இருக்க வேண்டும். இல்லையெனில் மாஸ்க் போட்ட பின்பு, வலி ஏற்படும். ஆகவே தலைக்கு மாஸ்க் போடும் முன், இரவில் படுக்கும் போது  தலைக்கு எண்ணெய் தடவி, மறுநாள் காலையில் ஹேர் மாஸ்க் போட்டால் நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

கேனில் அடைக்கப்பட்ட பானங்கள் குடித்தால் புற்றுநோய் வருமா? அதிர்ச்சி தகவல்

பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள் எவை எவை?

காதில் தொடர்ச்சியாக இரைச்சலா? என்ன செய்ய வேண்டும்?

தினமும் சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்: மருத்துவர்கள் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments