Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூக்கடைப்பை சரிசெய்யும் சில எளிய இயற்கை வைத்திய குறிப்புகள்

Webdunia
சளி பிடித்துவிட்டால் இயற்கையான முறையில் அதை வெளியேற்ற வேண்டுடுமே தவிர ரசாயன மருந்துகளின் மூலம் அதை நம் உடலுக்குள்ளேயே வைக்கப் கூடாது. சளி சுவாசிக்க சிரமத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் சளி அதிகம் இருப்பவர்களுக்கு மூக்கடைப்பு இரவு நேரத்திலும், மிகவும் குளிர்ச்சியான காலநிலையின் போதும் ஏற்படும்.

 
ஜலதோஷத்தின் போது ஏற்படும் மூக்கடைப்பை சரிசெய்ய சிறிது உப்பை போட்டு, அதை நன்கு கலக்கி கொள்ளவும். பின்பு  அதனை மூக்கின் அருகில் வைத்து ஆழமாக உறிஞ்ச வேண்டும். அந்த நீரவி மூக்கினுள் பரவ வேண்டும். இதன் மூலம்  மூக்கடைப்பு எளிதாக நீங்குவதுடன், ஜலதோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
 
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து இறக்கவும். அதை தட்டு போட்டு மூடி விடவும். ஆவி பிடிக்கும் போது அதில்  நீலகிரி தைலம் 2 சொட்டு ஊற்றி ஆவி பிடிக்க வேண்டும். இதனை 2 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் மூக்கடைப்பு, சளி  தொல்லை நல்ல தீர்வு காணலாம்.
 
இரவில் படுக்கும் போது மூக்கடைப்பு ஏற்பட்டால், அதனால் நிம்மதியான தூக்கத்தை மேற்கொள்ள முடியாது. அதுமட்டுமின்றி,  கடுமையான காது வலியையும் ஏற்படுத்தும். ஆகவே மூக்கடைப்பு ஏற்படும் போது உடனே அதற்கு சிகிச்சை எடுக்க வேண்டும். அதிலும் நம் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சிகிச்சை அளிக்கலாம். சரி, இப்போது மூக்கடைப்பில் இருந்து விடுபடுவதற்கான சில எளிய இயற்கை வைத்தியங்களைப் பற்றி பார்ப்போம்.
 
ஒரு கப் தண்ணீரில் 2 அல்லது 3 பூண்டு பற்களைப் போட்டு, அத்துடன் 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க வைத்து, சில நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், முகத்தில் தேங்கியுள்ள சளி இளகி வெளியேறி, மூக்கடைப்பில் இருந்து நிவாரணம்  அளிக்கும்.
 
வெதுவெதுப்பான நீரில் நனைத்து துணியை நன்கு பிழிந்து, முகத்தின் மேல் 10-15 நிமிடம் வைக்க வேண்டும். இப்படி ஒரு  நாளைக்கு பலமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
சாதாரண டீ செய்து குடிப்பதற்கு பதிலாக, தினமும் புதினா, இஞ்சி, ஏலக்காய், துளசி போன்றவற்றை சேர்த்து டீ தயாரித்து குடித்து வந்தால், மூக்கடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments