Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எண்ணற்ற மருத்துவ பலன்களை அள்ளித்தரும் நன்னாரி !!

Webdunia
நன்னாரி குறுகிய நீண்ட இலைகளையுடைய கம்பி போன்ற கொடியினம். இதன் நறுமணம் உள்ள வேர்களே மருத்துவ பயனுடையது. நன்னாரிக்கு நறுக்கு மூலம்,  நறு நீண்டி போன்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. 

தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் தானே வளரக்கூடியது. நன்னாரியில் பக்கவிளைவுகள் இல்லை, நன்னாரி என்றாலே சர்பத்துதான் நினைவுக்கு வரும். இதில்  எண்ணற்ற மருத்துவ பலன்கள் நமக்கு கிடைக்கின்றன.
 
நன்னாரி வேரை அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வர அதிபித்தம் தீரும். நன்னாரி வேரை அரைத்து அதை கற்றாழை சாற்றுடன் சாப்பிட வண்டு கடியினால் ஏற்பட்ட அனைத்து பாதிப்புகளும் தீரும்.
 
வேர் சூரணம் அரை கிராம் காலை, மாலை வெண்ணையில் கொள்ள ஆரம்ப குஷ்டம் தீரும். தேனில் கொள்ள பாண்டு, காமாலை தீரும்.

நன்னாரி வேரை இடித்து சூரணம் செய்து அதற்கு சம எடை சர்க்கரை சேர்த்து வைத்துக்கொண்டு 35 கிராம் - 50 கிராம் வீதம் 2 வேளை 7 நாட்கள் கொடுக்க செரியாமை, அக்கினிமந்தம், வெள்ளை, கீல் பிடிப்பு, பிரமேகம் தீரும்.
 
பச்சை நன்னாரி வேர் 5 கிராம் நன்கு அரைத்து 200 மி.லி பாலில் சாப்பிட்டு வர மூலச்சூடு, மேக அனல், மேக வெட்டை, நீர்க்கடுப்பு, நீர்ச்சுருக்கு, வறட்டு இருமல் ஆகியவை தீரும். நீண்ட நாள் சாப்பிட நரை மாறும்.
 
வெயில் காலத்தில் ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள எளிய மருந்தாக நன்னாரி பயன்படுகிறது. நன்னாரி வேரை நீர்விட்டு காய்ச்சி அதில்  வெல்லம், எலுமிச்சை சாறுகலந்து தயாரிப்பதே நன்னாரி சர்பத். இது கோடை காலங்களுக்கு சிறந்த பானமாக திகழ்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி?

'சைவ ஆட்டுக்கால்' முடவாட்டுக்கால் கிழங்கு: மருத்துவப் பயன்களும், எச்சரிக்கையும்

தேங்காய் எண்ணெயும் அரிசியும்: சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த புதிய வழி

நமது உணவின் இரகசியம்: புறக்கணிக்கப்படும் கறிவேப்பிலையின் முக்கியத்துவம்

உடல் பருமன் மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை: பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

அடுத்த கட்டுரையில்
Show comments