Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவ பயன்கள் அதிகம் நிறைந்த நாயுருவி இலை...!

Webdunia
நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியினால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.
நாயுருவி கதிரில் இருக்கும் அரிசியை பாலில் அரைத்து உட்கொண்டால் பசியே எடுக்காது. எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் ,உணவுக்காக  நாட்டிற்கு வராமல் காட்டிலேயே மனிதர் கண்ணில் படாமல் இருக்க இயலும்.
 
நாயுருவி இலைகளில் அதி காலையில் நன்றாகப் பனித்துளி பட்டுள்ளதைப் பறித்து அங்கேயே கையால் கசக்கிப் பிழிந்த சாற்றை தேமல்,  பற்று, படை, சொறிகளுக்கு மேல் பூச்சாக பூசி வர குணமாகும்.
 
நாயுருவி இலையைக் கசக்கித் தேள் கடிபட்ட இடத்தில் அழுத்தமாகத் தேய்க்க விஷம் இறங்கிவிடும். நாயுருவி இலையை 10 கிராம் எடுத்து  அரைத்துச் சிறிது நல்லெண்ணெய் கலந்து 2 வேளையாக 10 நாட்கள் குடித்து வர இரத்த மூலம் குணமாகும்.
நாயுருவி இலையோடு குப்பை மேனி இலையையும் சம அளவாக எடுத்து கசக்கிச் சாறு எடுத்து தேள் கடி பட்டவர்களுக்கு கடிபட்ட வாயில்  தேய்க்க கடுகடுப்பு நீங்கி விஷம் இறங்கிவிடும்.
 
நாயுருவி வேர்ப்பட்டை, மிளகு சம அளவாக எடுத்துப் பொடி செய்து 1/4 கிராம் எடுத்து சிறிது தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வர  இருமல் குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments