Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விட்டமின்களும் நிறைந்துள்ள புதினா !!

Webdunia
புதினாவில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விட்டமின்களும் நிறைந்துள்ளன. புதினா ஜீரண சக்தியை அதிகரித்து பசியை தூண்டுகிறது.

புதினாவில் நீர்ச்சத்து, புரதம், கொழுப்பு, கார்போஹைடிரேட், நார்ப்பொருள் உலோகச்சத்துக்கள், பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, ஆகிய அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன.
 
புதினாவை நம் உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நம் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்புகளை கரைய செய்கிறது.வயிற்று போக்கு பாதிப்பு உள்ளவர்கள் புதினா துவையலை வடித்த சாதத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று போக்கு நின்று விடும்.
 
அசைவ உணவு மற்றும் கொழுப்பு நிறைந்த பொருட்களை சாப்பிடுவதால் உண்டாகும் அஜீரணத்தை சரிசெய்ய புதினா உதவுகிறது. நம் உடலில் உள்ள இரத்தத்தை சுத்திகரிக்கவும் புதினா பயன்படுகிறது.
 
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் உணவில் புதினாவை சேர்த்துக் கொள்வதின் மூலம் மலச்சிக்கலை சரி செய்யலாம். மூட்டு வலி பாதிப்பு உள்ளவர்கள் புதினா இலைகளை ஒரு பாத்திரத்தில் போட்டு குறைந்த அளவு தீயில், நீர் சேர்க்காமல் வதக்கி எடுத்து உடலில் வலி, குடைச்சல் இருக்கும் பாகங்களில் ஒத்தடம் கொடுத்து வந்தால் வலி குறையும்.
 
புதினா சாறு, பூண்டு சாறு, எலுமிச்சை சாறு இவைகளை ஒன்றாக கலந்து தலை முடியில் தடவி ஊற வைத்து பின் சிறிது நேரம் கழித்து அலசினால் பொடுகு மறைந்து கூந்தலும் பட்டுபோல் பளபளக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு திராட்சையில் இருக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

ஜலதோஷம், சளி பிரச்சனை ஏற்பட என்ன காரணம்?

வெட்டிவேர் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?

கீரைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments