Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பூசணிக்காய் விதையில் உள்ள மருத்துவ குணங்கள்...!

Webdunia
பூசணிக்காயில் புரோஸ்டேட் வீக்கம், நீரிழிவு மற்றும் கொலஸ்ட்ரால் போன்ற மூன்று நோய்களையும் குணமாக்கும். அதன் விதை பல்வேறு மருத்துவ நன்மைகளை கொண்டுள்ளது. பூசணிக்காய் விதையில் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உல்ளன, அத்துடன் பல்வேறு சுகாதார நலன்களை உள்ளடக்கியது. 
பூசணு விதையில் நார்ச்சத்து, புரதம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்  ‘இ’ ஆகிய சத்துகள் நிறைவாக உள்ளன. மேலும், மாங்கனீஸ், பாஸ்பரஸ், மக்னீசியம், தாமிரம், துத்தநாகம் ஆகிய அத்தியாவசிய தாதுச்சத்துகள் நிறைவாக உள்ளன.
 
பூசணி விதையில் உள்ள மக்னீசியச் சத்துகள் நமது உடம்பில் உள்ள ரத்த அழுத்தம் மற்றும் உடல் எடையைக் குறைத்து, இதய ஆரோக்கியத்தைக் காக்கும். ஒரு கப் பூசணி விதைகளைச் சாப்பிட்டால், அன்றைய நாள் முழுமைக்கும் தேவையான மக்னீசியம்  கிடைத்துவிடும்.
 
தாவர உணவுகள் மூலம் கிடைக்கக்கூடிய ஒமேகா-3 அமிலம் பூசணி விதைகளில் அதிகளவில் உள்ளன. இந்த அமிலம் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்யும். சர்க்கரைநோய் வராமல் தடுக்கும்.
 
இந்த விதைகளைக் காயவைத்து, பொடி செய்து, அந்தப் பொடியை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்துப் பாலில் கலந்து  சாப்பிட்டால், உடல் வலிமை அதிகரிக்கும்.
 
பூரோஸ்டேட் விரிவு, சர்க்கரை நோய் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் இவற்றை குணமாக்கும் ஒரு பானத்தை தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
 
தேவையான பொருட்கள்: 2 கப் தண்ணீர், ஒரு கையளவு பூசணி விதை.
 
செய்முறை:  பூசணி விதைகளை பொடியாக்கி, தண்ணீரில் 15 நிமிடங்கள் கொதிக்க விடவேண்டும். பின்பு அதை வடிகட்ட வேண்டும். பூசணி விதை டீ தயார்.  இதனை தினமும் ஒரு கப் குடித்து வந்தால் உடலில் எந்த பிரச்சனையும் வராது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments