Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிப்பு துளசியில் உள்ள மருத்துவ குணங்களும் பயன்களும் !!

Webdunia
இனிப்பு துளசியின் இலைகள், தண்டுகள் சர்கரை போன்று இனிப்பாக இருக்கும். இதில் கலோரீஸ் எதுவும் கிடையாது. அதனால் இதை சர்கரை வியாதியைக் குணப்படுத்த இதை அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள். இதிலிருந்து மாத்திரைகள் செய்கிறார்கள், எண்ணெய் எடுக்கிறார்கள்.

பொடியாகவும், பச்சை இலையாகவும் மருத்துவத்தில் பயன் படுத்துகிறார்கள். இதன் பொடியை காபி, டீ மற்றும் சோடாக்களில் பயன் படுத்திகிறார்கள். இந்த இலை இனிப்பில் சர்கரையைவிட 30 மடங்கு அதிகம். இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் சிறு வியாதிகள் குணமடைகின்றன. இது ‘பிளட் சுகர்’ இரத்த அழுத்தம் குறைவாக இருப்பது போன்ற வியாதிகளைக் குணப்படுத்தும். 
 
தினசரி உனவு முறைகளில் சர்க்கரையானது முக்கிய பொருளாக பயன்படுத்தப் பட்டு வருகிறது.   கரும்புச்சர்கரையானது அதிகமான கலோரிகளை கொண்டுள்ளதால் சர்ககரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கரும்பு சர்கரையை பயன்படுத்த முடியாமல் உள்ளனர்.  தற்போது இவர்கள் கரும்பு சர்கரைக்கு பதிலாக இனிப்பு துளசி இலை  பயன்படுத்தலாம். 
 
ஏனெனில் இனிப்பு துளசி இலை இயற்கையாகவே இனிப்பு தன்மையுடையது. இது கலோரிகளை உருவாக்குவதில்லை. ஆகவே இதனை கரும்பு சர்க்கரைக்கு பதிலாகவும், மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளான சாக்கரின், அஸ்பார்டேன் ஆகியவற்றிற்கு மாற்றுப் பொருளாக பயன்படுத்தலாம்.
 
இனிப்புத்துளசியின் இலைகளில் உள்ள ஸ்டீவியோசைடு மற்றும் ரெபடையோசைடு எனும் வேதிப்பொருள்களே இனிப்புத்தன்மைக்கு முக்கிய காரணமாகும். இனிப்புத் துளசியின் இலைகள் கொண்டுள்ள இனிப்பின் அளவை  கரும்பு சர்கரையோடு ஒப்பிட்டு பார்த்தால் கரும்பை விட 30 மடங்கு அதிக இனிப்பு கொண்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருவளையங்கள் தொல்லையா? இயற்கையான வழியில் முக அழகைப் பாதுகாக்கும் எளிய குறிப்புகள்!

இரவுப் பணி செய்யும் பெண்களுக்கு ஏற்படும் உடல்நல பாதிப்புகள்!

பேரீச்சம்பழம்: அளவோடு சாப்பிடுங்கள், ஆபத்துகளைத் தவிருங்கள்!

வி எஸ் மருத்துவ அறக்கட்டளை சார்பில் துல்லிய புற்றுநோய் சிகிச்சைக்கான மாநாடு

காய்ச்சலுக்கு இளநீர்: பலன் அளிக்குமா, பாதுகாப்பானதா?

அடுத்த கட்டுரையில்
Show comments