Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீரண மண்டலம் வலுபெற உதவும் மருத்துவகுணம் நிறைந்த பிரண்டை !!

Webdunia
சனி, 28 மே 2022 (17:05 IST)
பிரண்டையின் தண்டுகளை நார் நீக்கி துவையல் அல்லது சட்னி போல செய்து சாப்பிட்டு வந்தால் ஜீரண மண்டலம் வலுபெறும்.


பிரண்டை பிழிந்து வரும் சாற்றில் புளி, உப்பு கலந்து காய்ச்சி கை பொறுக்கும் சூட்டில் சதை பிழற்சி, அடிபட்ட வீக்கம், எலும்பு முறிவு, வீக்கம் போன்ற இடங்களில் பற்றுப்போட நல்ல நிவாரணம் கிடைக்கும். சுளுக்கு, உடல் வலி போன்றவை கூட சரியாகும்.

பிரண்டை உப்பு சிறிதளவு பாலில் கலந்து 3 வேளை குடிக்க கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் பேதி, சீதபேதி, நுரைத்த பச்சை பேதி போன்றவை குணமாகும்.

பிரண்டை உப்பை சிறிதளவு வெண்ணெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண், வாய்நாற்றம், உதடு, நாக்கு வெடிப்பு, சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை புண்கள், தீராத நாட்பட்ட வயிற்றுவலி, மூலம், மூல அரிப்பு, மலத்துடன் சீழ், இரத்தம் வருதல் போன்றவை தீரும்.

ஜாதிக்காய் சூரணத்துடன் பிரண்டை உப்பை சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி, உடல் பலவீனம், தாது இழப்பு முதலிய பிரச்சனைகள் தீரும்.
உடைந்த எலும்பு விரைவில் கூடும்

எதிர்பாராமல் ஏற்படும் விபத்துகளால் ஏற்படும் எலும்பு முறிவு குணமாக பிரண்டை வேரை உலர்த்தி பொடியாக்கி 1 கிராம் அளவு காலை, மாலை என இருவேளை கொடுத்துவர முறிந்த எலும்புகள் முறிந்த விரைவில் ஒன்று கூடும்.

மிளகு அளவு பிரண்டை உப்பை பசும் வெண்நெய்யில் குழைத்து காலை, மாலை என 2 வேளை சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கு, இரத்தம் தடைபடுதல், குத்துக் கடுப்பு போன்றவை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments