Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முடக்குவாதத்தை முடக்கும் முடக்கத்தான் கீரை

முடக்குவாதத்தை முடக்கும் முடக்கத்தான் கீரை
, வியாழன், 26 நவம்பர் 2015 (13:09 IST)
முடக்கத்தான் கீரை முடக்குவாதம் (Arthritis) ஏற்படுவதைத் தடுக்கும்.
 
  • சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
  • இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.
  • நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
  • ஆராய்ச்சியில் முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை  கண்டுபிடித்துள்ளனர்.
  • இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
  • முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
  • இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்டால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
  • முடக்கத்தான் கீரையில் புரதசத்து, நார்ச்சத்து, கார்போஹைட்ரேட், தாதூப்புகள் நிறைந்து காணாப்படுவதால் எலும்புகளின் வளர்ச்சிக்கும் வலிமைக்கும் துணைபுரியும்.
  • முடக்கத்தான் கீரையை துவரம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் வேறு பருப்புகளுடன் இந்தக் கீரையைச் சேர்த்துக் கூட்டும் செய்யலாம்.
  • கீரையைச் சாறு எடுத்து சூப்பாகச் சாப்பிடுவது பயன் தரும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
  • நீர் உள்ள இடங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டு பின் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil