Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பகாலத்தில் தேவையான கால்சியம் சத்துக்களை பெற உதவும் மருத்துவ குறிப்புகள் !!

Webdunia
பொதுவாக கால்சியம் அனைவருக்கும் தேவையான ஒரு சத்து. அதிலும் குறிப்பாக, கர்ப்பிணி பெண்களுக்கு, இது மிக முக்கியமான ஒன்று. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் மனதில் பல மாற்றங்கள் ஏற்படும். இது உடல் நலத்தையும் பாதிக்கும்.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பிணிகள் சாப்பிடும் உணவு குழந்தைக்கும் ஊட்டச்சத்து என்பதால் சத்தான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். அந்த வகையில் எலும்புகளை வலுப்பெறச் செய்யும் கால்சியம் அவசியம். 
 
கர்ப்பிணி பெண்கள் தேவையான அளவு கால்சியம் சத்தை எடுத்துக் கொள்வதால் உயர் இரத்த அழுத்த நோய் வராமல் காத்துக் கொள்ளலாம்.
 
இலந்தைப் பழம் கால்சியம் நிறைந்தது. கால்சியம் சத்து மட்டுமல்லாது இரும்புச் சத்து, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம் ஆகியவையும் உள்ளன. இந்த ஊட்டச்சத்து குழந்தை வளர்ச்சிக்கு பேருதவியாக இருக்கும்.
 
கால்சியத்தின் ஒரு முக்கிய குணமே, எலும்புகளுக்குத் தேவையான சத்துக்களை கொடுப்பது தான். இந்த வகையில், உங்கள் எலும்பை திடமாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்ள கால்சியம் அதிகம் உதவுகின்றது. 
 
கிவி பழத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்கள் அதிகமாக உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்க உதவக் கூடியது.
 
கால்சியம் சத்துக் குறைபாடு இருந்தாலும் இந்த மல்பெரிப் பழத்தை சாப்பிடுவதால் தீர்வு கிடைக்கும். மல்பெரியை அப்படியே சாப்பிடுவது துவர்ப்பாக இருந்தால், சப்போட்டா அல்லது வாழைப்பழத்துடன் ஸ்மூத்தியாகவும் தயாரித்துப் பருகலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சியும் இதய ஆரோக்கியமும்: இதய நோய்களைத் தடுப்பதற்கான வழிகள்!

உணவகங்களில் சாப்பிட்ட பின் பெருஞ்சீரகம் கொடுப்பது ஏன்?

மெட்டி அணிவது அறிவியல் ரீதியில் ஆரோக்கியமானதா? ஆச்சரிய தகவல்..!

மூளை வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்: நினைவாற்றல் மற்றும் கவனம் அதிகரிக்க வழிகள்

அதிக சத்துக்கள் எதில் உள்ளது ? வெள்ளை கொய்யாவா அல்லது சிவப்பு கொய்யாவா?

அடுத்த கட்டுரையில்
Show comments