Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொண்டை தொடர்பான நோய்களை குணமாக்கும் மருத்துவ குறிப்புகள்...!!

Webdunia
எலுமிச்சை பழத்தை பிழிந்து சாறு எடுத்து, அதை சூடு படுத்தி, சிறிது தேன் கலந்து, நாள் ஒன்றுக்கு 3 வேளை வீதம் உள்ளங்கையில் விட்டு, உட்கொள்ளவேண்டும். இதனால் தொண்டை, வலி தொண்டை தொடர்பான நோய்கள் குணமாகும்.

மாதுளை இளைச் சாற்றில், சில துளிகளை மூக்கில் விட்டால், மூக்கில் இருந்து ரத்தம் வடிவது நிற்கும்.
 
சித்தரத்தையைச் சிறிதளவு எடுத்துப் பொடித்து, பசும் பாலில் கலந்து உட்கொண்டால், தும்மல், மூக்கில் நீர் வடிதல் குணமாகும். 
 
பூண்டுத் தோல், மிளகு, ஓமம், ஆகியவற்றை இடித்து, நெருப்பு அனலில் இட்டு, புகையைப் பிடித்தால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல் முதலிய நோய்கள்  குணமாகும்.
 
வெறும் வயிற்றில் பச்சை திராட்சை பழத்தின் சாற்றைப் பருகினால், வறட்டு இருமல் குணமாகும்.
 
துளசி இலைச்சாறு 150 மில்லி, கற்கண்டு, இவை இரண்டையும் கலந்து, சர்ப்பத்தாகக் காய்ச்ச வேண்டும். அதில் வேளைக்கு ஒரு டீ ஸ்பூன் அளவு, தினசரி இருவேளை உட்கொண்ட பின், பசும்பால் அருந்தலாம். இந்த சர்பத் சர்வரோக நிவாரணியாகும்.
 
தேனையும், எலுமிச்சை பழ சாற்றையும், சம அளவில் உட்கொண்டால், சளி இருமல் ஆகியன குணமாகும். நீர்கோவை விலகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோடை வெயிலுக்கு உகந்த கம்பங்கூழ்.. என்னென்ன பலன்கள் தெரியுமா?

ஐஸ் கட்டி நீர் தெரபியால் கிடைக்கும் பலன்கள்..!

சைலண்ட் ஹார்ட் அட்டாக்.. கவனிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்து..!

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments