Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புண்களை குணப்படுத்த மருத்துவ குறிப்புகள்

புண்களை குணப்படுத்த மருத்துவ குறிப்புகள்
, வெள்ளி, 11 டிசம்பர் 2015 (11:43 IST)
நம் உடலில் பல்வேறு வகையான புண்கள் ஏற்படுகிறது. அதில் முக்கியமாக வாய்ப்புண், வெட்டுக்காய புண், தலையில் புண், புரையோடிய புண் போன்றவை நம்மை பாடாய் படுத்துகிறது.


 

 
இவற்றில் இருந்து நிவாரணம் பெற:
 
1. வேப்பங்கொழுந்துடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து காயத்தின் மேது தடவ காயம் ஆறிவிடும்.
 
2. நாயுருவி இலை, சுண்ணாம்பு, வெள்லைப்பூண்டு இவைகளைச் சம அளவு எடுத்து அம்மியில் வைத்து அரைத்து வழித்து, காயத்தை சுத்தம் செய்து அதன் மேல் வைத்துக் கட்டிவிட வேண்டும். காயம் ஆறிய பின் தான் இந்த மருந்து விழுந்துவிடும்.
 
3. வெட்டுக்காயம் ஆற வசம்பு தூளை காயத்தின் மீது தூவ குணமாகும்.
 
4. அடி, சிராய்ப்புக்கு மருதோன்றியிலையை அரைத்து நீரில் கலக்கிக் கழுவச் சிறுகாயம், அடி, சிராய்ப்பு தீரும்.
 
5. கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் , வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து கட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும்.
 
6. வாய்ப்புண் குணமாக நெருஞ்சில் இலையை சாறு எடுத்து வாய் கொப்பளிக்க வாய்ப்புண் ஆறும்.
 
7. காலில் முள்குத்திய வலி நீங்க வெற்றிலையில் நல்லெண்ணெய்யை தடவி அணலில் வாட்டி, சூட்டோடு வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க காயத்துக்கு போட செப்டிக் ஆகாது.
 
8. கருவேலம் கொழுந்தை மைபோல அரைத்து புண் மூது வைத்து கட்டி வந்தால் புண் ஆறிவிடும்.
 
9. புரையோடிய புண் அல்லது காயம் ஆற அத்திபால் தடவ புண்கள் ஆறும்.
 
10. படுக்கைப்புண் குணமாக குப்பைமேனி இலையை விளக்கெண்ணை விட்டு வதக்கி இளஞ்சூட்டில் தடவ படுக்கைப் புண் ஆறும்.

Share this Story:

Follow Webdunia tamil