Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சில பயன்தரும் இயற்கை அழகு குறிப்புகள் என்னவென்று பார்ப்போம்...!!

Webdunia
சந்தனக்கல்லில் ஜாதிக்காயை அரைத்து இரவில் படுக்குமுன் கண்ணைச் சுற்றி தடவிக் கொண்டு தூங்குங்கள். இப்படி பத்து நாட்கள் தொடர்ந்து செய்தால்  கருவளையம் மறையும்.

சில பெண்களுக்கு மீசை போன்று பூனை முடி முளைத்திருக்கும். சிலருக்கு முடி கன்னத்தின் பக்கவாட்டிலும் முளைக்கும். குப்பைமேனி இலை, வேப்பங்கொழுந்து,  விரலி மஞ்சள் மூன்றையும் மை போல் நன்றாக அரைத்து இரவில் படுக்குமுன் முடி இருக்குமிடத்தில் ஒரு வாரத்திற்கு பூசி வந்தால் ரோமங்கள் உதிர்ந்து விடும்.
 
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் பீர்க்கங்காய் கூடு வாங்கி, குளிக்கும்போது கழுத்தில் சோப் தடவி, கூட்டை வைத்து நன்றாக தேய்த்து கழுவுங்கள்.  நாளடைவில் கழுத்து கருமை நிறம் மாறிவிடும்.
 
உடல் குண்டாவதற்கு, தினமும் அரைக்கீரை, பருப்பு மற்றும் நெய் சேர்த்த சாதத்தை சாப்பிட்டு வந்தால் பத்தே நாளில் உங்கள் உடலில் மாற்றம் தெரியும்.
 
நெல்லிக்காய்களுடன், எலுமிச்சம்பழச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, மாதம் ஒருமுறை தலைக்கு தேய்த்து குளித்தால் இளநரை மறைந்துவிடும். முடி உதிர்வதும்  கட்டுப்படும்.
 
சிலருக்கு உள்ளங்கால் அதிகமாக வியர்க்கும். அப்படிப்பட்டவர்கள் காற்று படும்படியான செருப்புகளை அணியவேண்டும். ஷூக்களை அணியும் பழக்கமுள்ளவர்கள், தினமும் சாக்ஸ்களை துவைத்து அணிய வேண்டும். கை, கால்களை நீரால் துடைத்து, விரல்களுக்கு இடையிலும் பவுடர் பூசிக்கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments