Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவுரி மூலிகையின் மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (09:50 IST)
சித்த மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. முடிகளுக்கு நிறத்தை கொடுக்கும் தைலங்களில் சேர்க்கப்படுகிறது.


அவுரி இலையை நன்றாக அரைத்து கொட்டைப்பாக்கு அளவு எடுத்து 1/4 லிட்டர் வெள்ளாட்டுப்பாலில் கலந்து வடிகட்டி காலை வெறும்வயிற்றில் மூன்று நாட்களுக்கு கொடுக்க மஞ்சள் காமாலை குணமாகும்.

அதிகமாக பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் இதனை அவுரி மூலிகை கொண்டு உடனே சரிசெய்யலாம். யானை நெருஞ்சில், அவுரி இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து எலுமிச்சைப்பழம் அளவு எடுத்து மோரில் கலந்து பத்து நாட்களுக்கு காலைவேளையில் தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல் குணமாகும்.

மருதாணி இலை, அவுரி இலை இரண்டையும் காயவைத்து தனித்தனியாக அரைத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இரவு மருதாணி பொடியை தண்ணீரில் கலந்து வைத்து காலையில் தலையில் தேய்த்து ஒரு மணிநேரம் கழித்து அலசிவிட்டு தலைமுடியை உலரவிட வேண்டும்.

பிறகு அவுரி இலை பொடியை தண்ணீரில் கலந்து தலையில் பூசி ஒரு மணி நேரம் மீண்டும் ஊறவைத்து அலசவேண்டும். இப்படி மாதம் ஒரு முறை செய்தால் போதும் நரை முடி கருப்பாக மாறும்.

அவுரி இலை, பெருங்காயம், மிளகு சம அளவு எடுத்து அரைத்து சுண்டக்காய் அளவு சாப்பிட கீல்வாதம், வாயு ஆகியவை குணமாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாழைக்காய் உணவில் சேர்ப்பதால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

வெண்டைக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்..!

புதினாவை உணவில் சேர்த்து கொள்வதால் கிடைக்கும் பலன்கள்..!

பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

மனதை உருக்கும் ஒரு சந்திப்பு சென்னையில் : இரத்த ஸ்டெம் செல் கொடையாளர் அதனால் பலனடைந்த 11 வயது சிறுவனுடன் சந்திப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments