Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொடுதலை கீரையின் மருத்துவ பயன்களை பற்றி தெரிந்துக்கொள்வோம்...!

Webdunia
கீரையின் இலை, வேர் மிகுந்த மருத்துவ பயன் உடையது. பொடுதலை கீரை துவர்ப்புச் சுவையை கொண்டது.

பொடுதலை கீரையை சுத்தம் செய்து அதனுடன் பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய் விட்டு வதக்கி சட்னி போல செய்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.
 
வறட்டு இருமலால் பாதிக்கபட்டவர்கள் பொடுதலை இலையை சுத்தம் செய்து அதனுடன் பாசிப்பருப்பு கலந்து வேகவைத்து கூட்டு செய்து  சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
 
பொடுதலை இலையை நன்கு மைபோல் அரைத்து அக்கி கொப்புளங்கள் மீது தடவினால் எரிச்சல் நீங்குவதுடன் கொப்புளங்கள் உடைந்து புண்கள் விரைவில் ஆறும்.
 
பொடுதலை இலைகளை அரைத்து தலைவலி உள்ள பகுதியில் பற்று போல போட்டால் ஒற்றைத் தலைவலி விரைவில் நீங்கும். பொடுதலை கீரையை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் கருப்பை வலுப்பெறும்.
 
வெள்ளைப்படுதல் குணமாக பொடுதலை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் 1 தேக்கரண்டி பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் நோய் குணமாகும்.
 
பொடுதலை இலையை நெய்விட்டு வதக்கி மிளகு, சீரகம், உப்புச் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும். சீயக்காய் மற்றும் கூந்தல் தைலங்கள் தயாரிப்பில் பொடுதலை இலை முக்கிய இடம் பெறுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஷ்வாஷர்: இந்திய சமையல் பாத்திரங்களுக்கு ஏற்ற நவீன தீர்வு!

இந்தியாவில் ஐந்தில் ஒருவருக்கு நீரிழிவு நோய்: லான்செட் ஆய்வறிக்கை

டாய்லெட்டுக்குள் செல்போன் பயன்படுத்துபவரா நீங்கள்? மூலம் வரும் ஆபத்து! - மருத்துவர்கள் எச்சரிக்கை!

மைக்ரேன் தலைவலி என்றால் என்ன? காரணங்களும், தடுக்கும் வழிகளும்!

வாய் துர்நாற்றத்திற்கான காரணங்கள் என்ன? போக்க எளிய வழிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments