Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பயன்தரும் சில மருத்துவ குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்...!!

Webdunia
இருமல் மற்றும் சளியால் மூச்சு விடமுடியாமல் சிரமப்படும் குழந்தைகளுக்கு குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சரியான அளவில் சிறிதளவு கொடுத்து வந்தால் சளிப் பிரச்னைகள் தீர்ந்து விடும்.

சோற்றுக் கற்றாழையின் நடுப்பகுதியைப் பிளந்து அதிலுள்ள கசப்பான சாற்றை மோரில் கலந்து தினம்தோறும் சாப்பிட்டால் அல்சர் போன்ற நோய்கள் விரைவில் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
 
அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன் உடல் சூடும் தணியும்.
 
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி உடலில் அதிகரிப்பதுடன் முகத்தில் பொழிவு  அதிகரிக்கும்.
 
இரவில் துக்கம் வராமல் துன்பப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீர் குடித்துவிட்டு பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
 
சர்க்கரை நோய் கட்டுப்பட வேண்டுமானால் வெந்தயத்தைப் அரைத்து தினம்தோறும் ஒரு கரண்டி சுடுநீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை,  பெரியாநங்கையின் சாற்றையும் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments