வெறும் வயிற்றில் வெந்நீரில் எலுமிச்சை சாறு; கிடைக்கும் பயன்கள்!!

Webdunia
காலையில் பலரும் தங்களின் சுறுசுறுப்பை அதிகரிக்க காபி அல்லது டீயைக் குடிப்போம். ஆனால் அவற்றைக் குடிப்பதைத் தவிர்த்து, காலையில் ஒரு கப் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதால் உண்டாகும் நன்மைகளை பற்றி பார்ப்போம்.
காலையில் சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், செரிமான பாதைகளில் தேங்கியுள்ள கொழுப்புக்கள் கரைவதோடு, செரிமான அமிலத்தின் உற்பத்தியும் சீராக இருக்கும். மேலும் கல்லீரலில் உள்ள நொதிகளின் ஆற்றலை அதிகரித்து, கல்லீரலை வலிமையோடு  வைத்துக் கொள்ளும். 
 
குறிப்பாக சுடுநீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், அது குடலியக்கத்தை அதிகரித்து, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுவதைத்  தடுக்கும்.
எலுமிச்சையில் பெக்டின் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்க உதவும். மேலும் பெக்டின் குடலின்  ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி, சுடுநரில் எலுமிச்சை சாறு கலந்து குடிப்பதால், அது கலோரிகளின் அளவைக் குறைத்து,  உடல் எடையைக் குறைக்க உதவும்.
 
சுடுநீரில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், அது வயிற்றில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தடுக்கும்.
 
உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரித்து, நோய்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். மேலும் இதனை தொடர்ந்து ஒரு மாத காலம் பின்பற்றி வந்தால், அடிக்கடி சளி பிடிப்பதில் இருந்து விடுபடலாம்.
காலையில் எழுந்ததும் இயற்கை பானமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து கலந்து குடிப்பதன் மூலம், உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி, சருமத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

அடுத்த கட்டுரையில்
Show comments