Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல் நோய்களைப் போக்கும் தன்மை கொண்ட கஸ்தூரி மஞ்சள்!!

Webdunia
கஸ்தூரி மஞ்சள் சாதாரண மஞ்சளை விடச் சற்று மணம் அதிகமுள்ளது. தோல் நோய்களைப் போக்கும் தன்மையைப் பெற்றது. 
சாதாரண மஞ்சளுக்குப் பதிலாக, பெண்கள் கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூளாக்கியோ கல்லில் அரைத்தோ முகத்திற்குப் பூசி வந்தால், முகத்தில் பொலிவு ஏற்படும். முகப் பருக்கள், தேமல்கள் ஆகியவை வராது.
 
கஸ்தூரி மஞ்சளை இடித்துத் தூள் செய்து துணியில் சலித்து எடுக்க வேண்டும். இதனை தேனில் கலந்து சாப்பிட்டால் குன்ம நோய்கள், மற்றும் வயிற்று வலி ஆகியவை குணமாகும்.
 
பெண்கள் கஸ்தூரி மஞ்சள் கிழங்கைப் பொடித்து, உடல் முழுவதும் பூசி, சற்று நேரம் கழித்து குளித்தால் தோல் நோய்கள் நீங்கும். கரப்பான் புண்கள் விரைவில்  குணமாகும்.
கஸ்தூரிமஞ்சளையும், பூலாங்கிழங்கையும் சமஅளவு எடுத்து அரைத்து முகத்தில் பூசி வந்தால் முகம் பளபளப்பாக இருக்கும். இதனை தினமும் செய்து வர  வேண்டும்.
 
கஸ்தூரிமஞ்சள், பயித்தமாவு, தயிரை ஒன்றாகக் கலந்து முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முகப் பளபளக்க இது ஒரு சிறந்த பேஸ் பேக் ஆகும்.
 
முகத்தில் இயற்கை அழகு பேண, கஸ்தூரிமஞ்சள், கடலை மாவு, பச்சைப்பயறு மாவு, பாலாடை நன்றாக கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து குளிர்ந்த  நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதனை தினமும் செய்யலாம். அல்லது வாரம் 4 முறை செய்யலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

மூக்கு கண்ணாடியை தேர்வு செய்யும்போது கவனிக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்..!

தாடி வளர்ப்பவர்கள் கட்டாயம் கவனிக்க வேண்டிய சுகாதார குறிப்புகள்..!

மாம்பழம் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments