Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக சத்துக்களை கொண்ட இந்துப்புவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்....!!

Webdunia
மனிதர்களுக்கு நலம் தரும் 80 வகையான கனிமத் தாதுக்களைக் கொண்டது, ‘இந்துப்பு’. வட இந்தியர்கள் இந்துப்பு சேர்த்த உணவுகளைச் சாப்பிட்டே விரதங்களை முடிக்கிறார்கள். இந்துப்பு ஒருவகை பாறை உப்பாகும். சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் இந்த உப்பு  பயன்படுத்தப்படுகிறது.
குளிர்ச்சியூட்டும் தன்மையுள்ள இந்த உப்பு, பசியைத் தூண்டும்; மலத்தை இளக்கும் தன்மை கொண்டது. சாதாரண உப்பில்  இருப்பதைப்போலவே இந்துப்பில் சோடியம், குளோரைடு உள்ளது. 
 
இதில் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மெக்னீஷியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம்  உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
 
பாறைகளில் இருந்து வெட்டி எடுக்கப்படும் இந்துப்பு, நல்ல தண்ணீர் மற்றும் இளநீரில் ஊறவைத்துப் பதப்படுத்தப்பட்டு விற்பனைக்கு  வருகிறது. உப்புக்குப் பித்தத்தை அதிகரித்து வாந்தி, மயக்கம், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றை ஏற்படுத்தும் தன்மை உண்டு. ஆனால்,  இந்துப்பு பித்தத்தையும் கபத்தையும் சமன் செய்து சளி, இருமல் வராமல் தடுக்கும்.
 
செரிமான சக்தியை அதிகரித்துக் கண் பார்வை மற்றும் இதயத்தைப் பாதுகாக்கும் தன்மையும் இந்துப்புக்கு உண்டு. ரத்த அழுத்தத்தைச்  சீராக்கும். மனச்சோர்வு போக்கும். உடலில் நீர்ச்சத்தைத் தக்க வைக்கவும் ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைக்கவும் குடல்கள்  உணவை நன்றாக உறிஞ்சி உட்கிரகிக்கவும் உதவும். 
 
இந்துப்பு தைராய்டு பிரச்னையைத் தீர்க்கும் அருமருந்தாகும். இந்துப்பு கலந்த இளஞ்சூடான நீரால் வாய்க் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் நீங்கிப் பல்வலி, ஈறுவீக்கம் போன்றவை சரியாகும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிப்பு உணவுகள் அதிகம் சாப்பிட்டால் அறிவாற்றல் பாதிக்குமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் இந்த பிரச்சினை வருமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

நீரிழிவு பாதம் வெட்டி அகற்றப்படுவதை தடுக்கும் உத்திகள்! - புரொஃபசர் M. விஸ்வநாதன் வழங்கிய உரை!

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments