Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி!

Webdunia
குதிரைவாலியில் நார்ச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அதிகமாக உள்ளது. குதிரைவாலியில் கோதுமையில் இருப்பதை விட ஆறு மடங்கு நார்ச்சத்து உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவரிடமிருந்து வரும் முதல் அறிவுரையே அரிசி உணவைத் தவிருங்கள் என்பதே. இதனாலேயே சர்க்கரை நோயாளிகள் சாப்பாடு  என்றாலே எரிச்சலடைந்து மிகப்பெரும் மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். இதனைத் தடுக்க மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திருப்பது 
 
சிறுதானியங்களில் ஒன்றான ஊட்டச்சத்துகள் மிகுந்த குதிரைவாலி அரிசி. இதில் காணப்படும் அபரிமிதமான நார்ச்சத்து மற்றும் இரும்பு சத்துக்கள் சர்க்கரை  நோயாளிகளுக்கு உருவாகும் மலச்சிக்கலைத் தடுத்து கொழுப்பு அளவை குறைக்க உதவி செய்கிறது. 
 
இந்த குதிரைவாலி அரிசி ரத்தத்தில் உள்ள குளுக்கோசினை சீரான சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாக அமையும் குதிரைவாலி அரிசி. 
 
அடிக்கடி சளி, காய்ச்சலால் அவதிப்படுபவர்களுக்கும் குதிரைவாலி அரிசி வரப்பிரசாதம். இதனைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு  சக்தி அதிகரிக்கச் செய்கிறது.
 
செரிமானத்தின் போது ரத்தத்தில் இருந்து குளுக்கோஸ் அளவை மெதுவாக வெளியிடுவதற்கும் உதவுகிறது. இதய நோயாளிகள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு  நல்ல உணவாகப் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் என்னென்ன நன்மைகள்?

அடுத்த கட்டுரையில்
Show comments