Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவும் கம்பு !!

Webdunia
கம்பில் கரையாத நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. இது பித்த அமிலங்களின் சுரப்பையும் குறைக்கிறது மற்றும் பித்தப்பை கல் உருவாவதையும் தடுக்கிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் கம்பு மிகவும் சக்தி வாய்ந்தது. அதிக நார்ச்சத்து இருப்பதால், மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது இது மெதுவாக செரிப்பதால், குளுக்கோஸை மெதுவான விகிதத்தில் வெளியிடுகிறது. இது ஆரோக்கியமான ரத்த சர்க்கரை அளவை நீண்ட காலத்திற்கு பராமரிக்க உதவுகிறது.
 
கம்பில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், வயிற்றில் இருந்து குடலுக்கு கம்பு உணவுகள் செல்ல அதிக நேரம் எடுக்கும். இந்த வழியில், கம்பு நீண்ட நேரத்திற்கு பசியைக் கட்டுப்படுத்துகிறது. இதன்மூலம் அவர்களின் எடையைக் குறைப்பதற்கு நல்ல மருந்தாக கம்பு உதவுகிறது.
 
கம்பில் பைட்டோ கெமிக்கல் உள்ளது, கொழுப்பு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடிய, பைடிக் அமிலம்  உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் உறுதிப்படுத்துகிறது. இதன்மூலம் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்.
 
இன்று குடல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற பலவகையான புற்றுநோய்கள் வருகின்றன. கம்பில் புற்றுநோய் கட்டிகளை எதிர்க்கும்  பண்புகள் உள்ளன. ஒரு ஆய்வில் கம்பு உணவை வழக்கமாக உட்கொள்ளும் பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் வரக்கூடிய மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் உருவாகாமல் பாதுகாக்கிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
இளமைத் தோற்றத்திற்கு கம்பை அதிகம் உட்கொள்பவர்களுக்கு ரத்தத்தில் உள்ள செல்களை புதுப்பித்து இளமையில் முதுமை ஏற்படுவதைத் தடுக்கிறது.
 
தாய்ப்பால் சுரப்பிற்கு குழந்தை பெற்ற சில பெண்களுக்கு, தாய்ப்பால் சுரப்பு குறைந்தோ அல்லது முற்றிலுமாக நின்றுவிடும். இவர்கள் தினமும் கம்பு கூழ், களி போன்றவற்றை சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments