Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடிக்கடி ஏற்படும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை போக்கும் கமலா ஆரஞ்சு !!

Webdunia
வியாழன், 5 மே 2022 (09:19 IST)
கமலா ஆரஞ்சில் உள்ள பிலேவனாயுடுகள் அதிக ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இதில் இருக்கக்கூடிய மெக்னீசியம் இரத்த அழுத்தம் சீராக இருக்க உதவி செய்கிறது.


உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர நன்மை பயக்கும். மூட்டுகளில் வலி அல்லது வீக்கம் இருந்தால் கமலா ஆரஞ்சு ஜூஸை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இதில் இருக்கக்கூடிய நோயெதிர்ப்பு அழற்சி பொருள் மூட்டுகளில் இருக்கக்கூடிய வீக்கத்தை குறைத்து மூட்டுகளுக்கு நல்ல பலன் கொடுக்கக் கூடியது.

ஆரஞ்சு பழத்தில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றிகளான பீட்டா கரோட்டீன்கள் அதிக அளவில் உள்ளன. இது சூரியக் கதிர்களால் சரும செல்களில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது மற்றும் முதுமை தோற்றம் ஏற்படாமல் தடுக்கிறது.

விந்தணுக்களின் ஆரோக்கித்திற்கு கமலா ஆரஞ்சு மிகவும் நல்லது. கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர இதில் இருக்கக்கூடிய ஃபோலேட் என்னும் ஊட்டச்சத்து விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

கண் பார்வை மங்கல் போன்ற கோளாறு உடையவர்கள் கமலா ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வர கண்பார்வைத் தெளிவடையும். கமலா ஆரஞ்சில் விட்டமின் சி அதிக அளவில் உள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தி உடலில் தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

அடிக்கடி சளி காய்ச்சல் போன்ற பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்கள் கமலா ஆரஞ்சு காயை சாப்பிட்டு வர பலன் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் கமலா ஆரஞ்சு பழத்தை சாப்பிட்டு வர அதில் இருக்க கூடிய நார் சத்து குடலியக்கத்தை சீராக்கி மலம் எழுதில் வெளியேற உதவி செய்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments