Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள பலாப்பழம் !!

Webdunia
சனி, 22 ஜனவரி 2022 (18:55 IST)
பலாப்பழத்தில் நமது உடல் வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வைட்டமின் ஏ யும் சுண்ணாம்புச் சத்தும் அதிக அளவில் உண்டு.


சூட்டையும், குளிர்ச்சியையும்  கொடுக்கும் அந்த ஆற்றலுள்ள பழமாகும். இது அவரவர் உடல் வாகைப் பொறுத்து குளிர்ச்சியையும், சூட்டையும் தருவதாகும். இந்தப் பழத்தை அதிக அளவில் சாப்பிட கூடாது .அதிலும் குறிப்பாக வாத நோய் உள்ளவர்கள் சாப்பிடவே கூடாது.

பலாப்பழச் சுளையை இரவு வேளையில் தேனில் ஊறவைத்துக் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல், ஆஸ்துமா போன்ற மூச்சு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

பழ வகைகளிலேயே மிகப்பெரிய தோற்றமுடன் விளங்கும் பலாபழம் வெளியே சொரசொரப்பான தோலைக் கொண்டு திகழ்கிறது. தடிப்பான தோலை அகற்றினால் சடை போன்ற அமைப்புக்குள் இருக்கும் பலாச்சுளைகள் தங்கம் போன்ற பளபளப்புடன் காணப்படும்.

வைட்டமின் பி,  சி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. சுண்ணாம்புச் சத்தும்,இரும்புச் சத்தும் கொண்டு திகழும் இப்பழம் வாயுவை ஓரளவு உண்டு பண்ணுடையதாக இருந்தாலும், ரத்த விருத்திக்குச் சிறந்து விளங்குவதாகும்.

நரம்புகளுக்கு உறுதியளிக்கும் தன்மை கொண்ட இப்பழம், நமது தோலை மிருதுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இரவில் தேனைக் கலந்து வைத்துச் சாப்பிட்ட முடியாதவர்கள் நாட்டு சர்க்கரையைக் கலந்து வைத்து மறுநாள் காலையில் சாப்பிடலாம் அல்லது பசு நெய் கலந்து சாப்பிட வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!

வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments