அற்புத மருத்துவகுணங்கள் நிறைந்து காணப்படும் முடக்கத்தான் மூலிகை !!

Webdunia
புதன், 27 ஜூலை 2022 (13:36 IST)
முடக்கத்தான் ஒரு கொடி வகையைச் சேர்ந்த மருத்துவ மூலிகை கீரையாகும். இது வேலியோரம் படர்ந்து வளரும் ஒரு கொடியினத்தை சேர்ந்தது. இதற்கு முடர்குற்றான், முடக்கறுத்தான் போன்ற வேறு பெயர்களும் உண்டு. இதன் இலை, வேர் என அனைத்துமே மருத்துவ தன்மை கொண்டதாகும்.


முடக்கத்தான் கீரையில் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து, தாது சத்து, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சரியான அளவில் அடங்கியுள்ளது.

முடக்கற்றான் இலையை வதக்கி அடி வயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பிரச்சனை சரியாகும் மற்றும் அடிவயிற்று வலி குறையும். மலமிளக்கியாக செயல்படும்.

முடக்கற்றான் கொடி மலமிளக்கி செயல்படும் தன்மையுடையது. முடக்கத்தான் கொடியை குடிநீரில் இட்டு அதனுடன் ஆமணக்கு எண்ணெய் சேர்த்து குடித்து வர கெட்டியாக உள்ள மலம் இளகி மலத்தைக் கழிக்கச் செய்யும்.

முடக்கற்றான் இலையை ரசம் போல வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலச் சிக்கல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

முடக்கற்றான் இலையை ரசம் போல வைத்துச் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள தேவையற்ற வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம்,மலச் சிக்கல் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தயிர் உணவு மட்டுமல்ல.. அழகுக்கும் உதவும்.. என்னென்ன பலன்கள்?

நீடித்த ஆரோக்கியத்துக்கு 8 முக்கிய பழக்கங்கள்: ஹார்வர்டு மருத்துவர் அறிவுரை

உடல் பருமனால் கருத்தரிப்பதில் சிக்கலா? தாழ்வு மனப்பான்மை மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை

புற்றுநோய் வருவதற்கான அறிகுறிகள் என்ன? தடுப்பு முறைகள் குறித்த விளக்கம்..!

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments