Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை நோய்களுக்கு மருந்தாகிறதா கடுக்காய்....!

Webdunia
கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளையெல்லாம் வெளித்தள்ளும் மருத்துவ குணம் மிக்கது. நமது உடலுக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.
நம்முடைய அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடலுக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம். கடுக்காய் அனைத்து நாட்டு  மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
 
கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு நன்கு தூளாக்கி, தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு  வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.
 
கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண்,  இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக் குழாய்களில்  உண்டாகும் புண், மூத்திர எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு, நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல், உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம்,  ரத்தபேதி, பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் நோய்களுக்கான அருமருந்துதான் இந்த கடுக்காய்.
 
இதை பற்றி சித்தர் கூறும் பாடல் ஒன்றில், “காலை இஞ்சி.. கடும்பகல் சுக்கு.. மாலை கடுக்காய் மண்டலம் உண்டால் விருத்தனும் பாலனாமே. அதாவது காலை வெறும் வயிற்றில் இஞ்சி, நண்பகலில் சுக்கு, இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)  சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
 
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம். கடுக்காய் எல்லா வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய முக்கியமான பொருள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments