Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலை சீராக்கும் சீராகம் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா...?

Webdunia
சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம் தினம் இரண்டு வேளையாக சாப்பிட்டால் உடல் அசதி நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும்.

சீரகத்தை லேசாக வறுத்து அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புகள் வலுப்பெறும், நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 
சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால் வயிற்றுப் பொருமல் வற்றி நலம்  பயக்கும்.
 
சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய அரைத்து எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால் குடல் கோளாறுகள் குணமாகும். ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு  கஷாயம் செய்து சாப்பிட்டால் அதிக பேதி போக்கு நிற்கும்.
 
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய அரைத்து பசும்பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன்  கிடக்கும்.
 
சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும். சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்த்து கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
 
கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்து தேனில் குழைத்து சாப்பிட்டால் தொடர் விக்கல் விலகும். மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

தொடர்புடைய செய்திகள்

எவ்வளவு செல்சியஸ் வெயில் இருந்தால் என்ன அலெர்ட்? – பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும்?

செயற்கை குளிர்பானங்கள் குடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

தண்ணீர் குறைவாக குடிப்பதால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

பெண்கள் மேம்பாட்டுக்கான "அன்பு" என்ற புதிய சேவை! சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் தொடக்கம்!

கோடை வெயிலில் தாக்கும் ஹீட் ஸ்ட்ரோக்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments