Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகப்பொலிவை அதிகரிக்க செய்யும் தக்காளி ஃபேஸ் பேக்...!

Webdunia
தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.
முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.
 
தக்காளி சாறு சருமத்தின் PH சமநிலையை பராமரித்து முகத்தில் பருக்கள் உருவாவதைத் தடுக்கிறது. பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.
 
தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இப்படி வாரம் 2 முறை செய்தால் உங்கள் கைகள் மிருதுவாக மாறும். கைகளின் உண்டாகும் கருமையை போக்கிவிடலாம். கிளிசரின் கைகளில் இருக்கும் அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச்  செய்யும்.
 
தக்காளி சாறு முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது. கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும்  அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.
 
எண்ணெய் பசை நீங்கும் முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து  15 நிமிடம் ஊற வைத்து  கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைப்பதை நீங்களே காணலாம்.
 
தக்காளி ஃபேஸ் வாஷ் தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1  டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ்  உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள்  முழுமையாக வெளியேறும்.
 
ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது. தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது.
 
தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும்  எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15  நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்பட்டு இருப்பதை  காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments