எந்தெந்த காய்கறிகளை எப்படி கெடாமல் ஃப்ரெஷ்ஷாக வைப்பது...?

Webdunia
வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (16:39 IST)
காய்கறிகளில் உள்ள சத்துக்கள் கெடாமல் இருக்க  எல்லா காய்கறிகளையும் நாம் ஃபிரிட்ஜில் வைத்து பயன்படுத்த முடியாது. எந்தெந்த காய்கறிகளை எப்படி ஃப்ரெஷ்ஷாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.


கேரட்டை வாங்கி ஒரு அகன்ற பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் கேரட்டை போட்டு வைக்க வேண்டும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்த தண்ணீரை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் கேரட் 10 நாட்கள் வரை கெடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்.

பச்சை மிளகாயை காம்புடன் வைத்தால் சீக்கிரமே வாடி விடும். பச்சைமிளகாய் கெடாமல் இருக்க அதனை வாங்கிய உடன் காம்பை நீக்கி வைத்தால் 15 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். இதனை தனியாக ஒரு டப்பாவில் அல்லது பிளாஸ்டிக் கவரில் வைக்க வேண்டும்.

முருங்கைக்காய் வாங்கிய உடனே அதனை துண்டுகளாக நறுக்கி வைத்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

இஞ்சியை வாங்கி, மண் தொட்டியில் மண்ணை நிரப்பி அதனை ஈரமாக்கி அதில் புதைத்து வைத்து தேவைப்படும்போது எடுத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடலில் உள்ள தேவையற்ற முடியை நீக்க எளிய இயற்கை வழி!

சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்தாகும் நாவல் பழங்கள்!

முள்ளங்கி கீரையை சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் பலன்கள்..!

பூசணிப்பழம் உணவில் சேர்ப்பதால் என்னென்ன நன்மைகள்?

முருங்கை கீரையில் இவ்வளவு சத்துக்கள் இருக்கின்றதா? ஆச்சரியமான தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments