Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் உபாதைகளை நீக்க உதவும் மூலிகைப்பொடிகள் !!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (14:46 IST)
அறுகம்புல் பொடி: இது ரத்தத்தை சுத்தப்படுத்துவதாகும். உடலுக்கு ஊட்டத்தைக் கொடுக்கும். 2-5 கிராம் அளவு எடுத்து தேன், தண்ணீர் கலந்து குடித்து வர வேண்டும்.


வல்லாரைப்பொடி: ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். உடலுக்கு வலிமை தரும். வில்வப்பொடி: குடல் புண், வாந்தி, மயக்கம் தீரும். இதை தண்ணீரில் கலந்து குடித்தால் போதும்.

காசினிக் கீரைப் பொடி: நீரிழிவு மற்றும் சிறு நீரக நோய்களை தீர்க்க வல்லது. வெந்நீருடன் கலந்து சாப்பிட வேண்டும். கறிவேப்பிலைப் பொடி: வாய் ருசியின்மை, வயிற்று இரைச்சல், பித்த காய்ச்சல் போக்கும்.

ரோஜாப்பூ பொடி: காய்ச்சல், தாகம் போக்கும். உடலை குளுமைப்படுத்தும். ரத்த சுத்தி ஆக்கும்.

கடுக்காய்ப் பொடி: மலச்சிக்கல், பசியின்மை, வயிற்றுப் புண்கள் இவைகளை போக்க வல்லது. துளசி பொடி: காய்ச்சலை போக்கி உடலின் வெப்பத்தை குறைக்கச் செய்யும். வெந்நீருடன் கலந்து குடிக்க வேண்டும்.

சுக்குப் பொடி: வாய்வு, நீர் ஏற்றம், பல்வலி, காது குத்தல், சுவாசக் கோளாறுகளை தீர்க்க உதவும். பசியை உண்டாக்க வல்லது. இதை தண்ணீரில் காய்ச்சி வடிகட்டி உட்கொள்ள வேண்டும்.

மருதாணிப் பொடி: நகப்புண், சுளுக்கு, கைகால்வலி, எரிச்சல், பித்த வெடிப்பு போன்றவற்றை நீக்கும். இதை தண்ணீரில் கலந்து பூச வேண்டும். மணத்தக்காளிப் பொடி: வாய்ப்புண், வயிற்றுப் புண், இருமல், இளைப்பு நோய்களை தீர்க்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments