Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூலிகை பொடிகளும் அதன் அற்புத மருத்துவ குணங்களும்..!!

Webdunia
அருகம்புல் பொடி: அதிக உடல் எடை, கொழுப்பை குறைக்கும். மேலும் ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல் நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடையும்.
நெல்லிக்காய் பொடி: பற்கள் எலும்புகள் பலப்படும். வைட்டமின் "சி" உள்ளது. மேலும் இவை டயாபடீஸ் மட்டுமில்லாமல், உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, இதயத்தை காக்க, மூட்டுவலி குறைய, கண்களை பாதுகாக்க, மொத்தத்தில் உடல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.
 
கடுக்காய் பொடி: குடல் புண் ஆற்றும், சிறந்த மலமிளக்கியாகும். கடுக்காய் வாயிலும் தொண்டையிலும், இரைப்பையிலும், குடலிலும் உள்ள ரணங்கள் ஆற்றிடும் வல்லமை பெற்றது. பசியைத் தூண்டி இரத்தத்தைச் சுத்தப்படுத்தி வாத பித்த கபம் ஆகியவற்றால் வரும் ஏராளமான  நோய்களைக் குணப்படுத்தும். 
வில்வம் பொடி: அதிகமான கொழுப்பை குறைக்கும். இரத்த கொதிப்பிற்கு சிறந்தது. வில்வ பொடியை கொண்டு தேநீர் தயாரித்து குடித்தாலே போதும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கலாம்.
 
அமுக்கரா பொடி: தாது புஷ்டி, ஆண்மை குறைபாடுக்கு சிறந்தது. வாதநோய், நரம்பு தளர்ச்சி, கை, கால் நடுக்கம், மன சோர்வு, தூக்கமின்மை, முதுமையில் ஏற்படும் சோர்வு போன்றவற்றிற்கு அமுக்கரா சிறந்த மருந்து. 
 
சிறுகுறிஞ்சான் பொடி: சர்க்கரை நோய்க்கு மிகச் சிறந்த மூலிகையாகும். காய்ச்சல் தீர 10 சிறுகுறிஞ்சான் இலைகளுடன், 5 மிளகு, ½  தேக்கரண்டி சீரகம் சேர்த்து, நசுக்கி, ½ லிட்டர் நீரில் இட்டுக் கொதிக்கவைத்து, கஷாயம் செய்து, ஒரு மணி நேரத்திற்கு இரண்டு  தேக்கரண்டிகள் வீதம் குடித்து வர மிக விரைவிலேயே காய்ச்சல், ஜுரம் போன்றவை நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments