Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடலில் வியர்வை வெளியேறுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!!

Webdunia
வியர்வை வெளியேறுவதனால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் உடற்பயிற்சி செய்வதனாலோ அல்லது நடைப்பயிற்சி செய்வதாக இருந்தாலோ,  எந்த வழியில் வியர்வை வெளியேறினாலும் அது நல்லது தான்.
வியர்வை வெளியேறுவதின் மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேறும். உடலில் மற்றும் இதயத்தில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் இதயத்தின் செயல்பாடு ஆரோக்கியமாக இருக்கும்.
 
டாக்ஸின்கள் வெளியேற்றம் வியர்வை மூலம் உடலில் தங்கியுள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்படுவதால், உடல் சுத்தமாவதோடு, சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளும் வெளியேறி சருமமும் பொலிவோடு இருக்கும்.
 
சிறுநீரகம் வியர்வை அதிகம் வெளியேறினால் சிறுநீரக கல் உருவாவதைத் தடுக்கலாம். எப்படியெனில் வியர்வையின் மூலம் உடலில் உள்ள  உப்புக்கள் வெளியேறி, எலும்புகளில் கால்சியம் தக்க வைக்கப்படும். இதன் மூலம் சிறுநீரகங்களில் உப்பு மற்றும் கால்சியம் படிந்து கற்களாக உருவாவதைத் தடுக்கலாம். அதுமட்டுமின்றி வியர்வை அதிகம் வெளியேறினால், தண்ணீர் அதிகம் குடிக்க தோன்றும். இப்படி தண்ணீர் அதிகம்  குடிப்பதால், சிறுநீரகங்களின் செயல்பாடும் மேம்படும்.
 
காயங்கள் குணமாகும் சமீபத்திய ஆய்வு ஒன்றில், வியர்வைக்கும், காயங்கள் குணமாவதற்கும் சம்பந்தம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு வியர்வையானது ஆன்டி-பயாடிக்ஸை உடல் முழுவதும் பரப்பி, நுண் கிருமிகளிடமிருந்து நல்ல பாதுகாப்பு அளிப்பதே காரணம்.
 
உடல் வெப்பநிலை சீராகும் வியர்வை வெளியேறுவதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக இருக்கும். நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும் வியர்வைக்கும் நோயெதிர்ப்பு சக்திக்கும் சம்பந்தம் உள்ளது. அதனால் தான் காய்ச்சல் இருக்கும் போது வியர்வை வெளியேறினால், உடனே  காய்ச்சல் குணமாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் நீர் கசிவது ஏன்?

அதிகரிக்கும் கோடை வெயில்.. 24 கோடி குழந்தைகளுக்கு ஆபத்து! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு யுனிசெஃப் எச்சரிக்கை!

ஜிம்முக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மக்களே உஷார்! தர்பூசணியை சிவப்பாக்க ரசாயனம் கலப்பு!?

பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான மேம்பட்ட கிளினிக்-ஐத் தொடங்கும் ரேலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments