Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை சத்துக்களை கொண்டுள்ளதா வேர்க்கடலை...!

Webdunia
நிலக்கடலை, வேர்க்கடலை,  மணிலாக் கொட்டை என பல்வேறு பெயர்களில் தமிழகத்தில் அழைக்கப்படும் இது, குளிர்காலத்தில் விளையும்  பயிர் ஆகும். இதை நம் முன்னோர்கள் குளிர்காலத்தில் தங்களது உணவில் இதை அதிகம் சேர்த்து கொண்டார்கள்.
வேர்க்கடலை இயற்கையாகவே நமது உடலின் வெப்ப அளவை அதிகரிக்கச் செய்யும். குளிர்காலத்தில் தேவையான வெது வெதுப்புடன் உடலை வைத்திருக்கும். மாமிசம், முட்டை, காய்கறிகளைவிட வேர்க்கடலைக்குதான் புரதச் சத்து அதிகம்.
 
வேர்க்கடலை சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சியால் ஏற்படும் ஆஸ்துமா, ப்ராங்கைடிஸ் போன்ற நோய்கள் நீங்கும், நெஞ்சு சளியினை நீக்கும்  வல்லமையும் வேர்க்கடலைக்கு உண்டு.
 
நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளைவளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.
 
நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற  மூளையை உற்சாகப்படுத்தும்.
 
நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். மேலும் பித்தப்பை கல்லைக் கரைக்கும்.
 
நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம்.
 
பெண்களுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கில் இருந்து குணமடையவும் நிலக்கடலை சிறந்த மருந்தாகும்.
 
கடலை எண்ணெய் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பைக் கரைத்து நல்ல கொழுப்பைத் தரக்கூடும் என்று ஆராய்சியாளர்கள்  தெரிவிக்கிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுகளை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சிரமமின்றி கடக்க உதவும் யோகா! - சத்குருவின் ஆலோசனை!

தலைமுடி வளர என்னென்ன வைட்டமின்கள் தேவை?

தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..!

வயதானவர்களை பாதிக்கும் கால் மூட்டு கீல்வாதம்.. அறிகுறிகள் என்ன?

காதுகளில் எறும்பு, பூச்சி புகுந்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments