தலைமுடி ஆரோக்கியத்திற்கு உதவும் கொய்யா இலைகள் !!

Webdunia
கொய்யா இலைகளை தலைமுடிக்காக பயன்படுத்தும் போது உங்களுக்கு கிடைக்கும் குறிப்பிடத்தக்க பலன்களை பெறலாம். இதில் வைட்டமின் C நிறைந்துள்ளதால் முடி உதிர்வு தடுக்கப்படும்.

இதில் வைட்டமின் B மற்றும் C நிறைந்துள்ளதால் முடி வளர்ச்சியை அதிகப்படுத்துவதோடு, அடர்த்தியையும் உண்டாக்கும். பல்வேறு முடி பிரச்சனைகளான முடி உதிர்தல், பொடுகுத் தொல்லை மற்றும் முடி வெடிப்பு போன்றவற்றிற்கு கொய்யா இலை உடனடி தீர்வளிக்கும்.  
 
இதில் வலி நிவாரணி, அழற்சி எதிர்ப்பு, ஆக்சிஜனேற்றம் மற்றும் ஆண்டிமைக்ரோபியல் போன்ற பண்புகள் உள்ளதால் தலைமுடி வேர்களுக்கு அதிக சக்தியை கொடுக்கின்றது. அதனால் முடி உதிர்வு குறைகின்றது.
 
இந்த இலைகளின் சாறு நன்கு சருமத்தில் ஊடுருவுவதால், அரிப்பு, பொடுகு மற்றும் வறட்சி போன்ற பிரச்சனைகள் தலையில் ஏற்படுவதில்லை. இதில் நிறைந்திருக்கும் சத்துக்கள் ஆரோக்கியமான தலைமுடியை பெற உதவுகிறது.
 
தலைமுடி சேதம் அடைவதில் இருந்து பாதுகாப்பது, ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துவது, மற்றும் சூரிய கதிர்களிடம் இருந்து பாதுகாப்பது போன்ற பலன்களை இந்த கொய்ய இலைகள் தருகின்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினம் ஒரு கீரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? பயனுள்ள தகவல்..!

நீரிழிவு அதிகரிப்புக்குக் காரணம் என்ன? வெள்ளை உணவுகள் பற்றி ஆயுர்வேத மருத்துவர் விளக்கம்!

பிறப்புறுப்பில் அரிப்புக்கான முக்கிய காரணங்கள்: இந்த தவறை எல்லாம் செய்யாதீர்கள்..!

ஏடிஎம் ரசீது ஆண்களின் விந்தணுவை பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்..!

நடு இரவில் விழிப்பு வந்தால், பிறகு தூக்கம் வருவதில்லை. இந்தப் பிரச்சினையை எப்படிச் சரிசெய்வது?

அடுத்த கட்டுரையில்
Show comments