Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அற்புத மருத்துவ பயன்களை அள்ளி தரும் வெந்தயம்...!!

Webdunia
அஜீரணம், வயிற்றுக்கோளாறுகள் மேலும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, ஒரு தேக்கரண்டி அளவு வெந்தயத்தையும் பெருங்காயத்தையும் வறுத்து, ஆறவைத்து,  மிக்ஸியில் பொடி செய்து அதனை ஒரு பாட்டிலில் போட்டு தினமும் தண்ணீர் அல்லது மோருடன் பயன்படுத்தலாம்.

வாய் துர்நாற்றம், வயிற்றுப்புண் மற்றும் நீரிழிவு நோய்களுக்கு வெந்தயத்தை மோரில் ஊறவைத்து தினமும் காலையில் சாப்பிட்டு வாருங்கள். கல்லீரலில் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி உடல் முழுவதும் இரத்தம் சீராக ஓட வெந்தயம் உதவி செய்யும்.
 
சிறுநீரக கற்களால் அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை உண்டு வந்தால் சிறுநீரகத்தில் சேரும் நச்சுக்கள் முழுமையாக வெளியேறும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் வெந்தயத்தை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் அதில் நார்ச்சத்து இருப்பதால் வயிற்றை நிரப்பி நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கும்.
 
அல்சர் போன்றவற்றிக்கு வெந்தயம் சிறந்த நிவாரணி. அதிலும் இரவில் வெந்தயத்தை நீரில் ஊறவைத்து காலையில் அந்த நீரை அல்லது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீரை குடித்து வந்தாலோ அல்சர் போன்ற நோய்களுக்கு சிறந்தது. இதில் கரையும் நார்ச்சத்து இருக்கிறதால் வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றுடன் சாப்பிட்டு வந்தால் மலசிக்கல் தீரும்.
 
அமினோ ஆசிட் இன்சுலின் உற்பத்தியை தூண்டுவதால் தினமும் காலையில் வெந்தயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருவது நீரிழிவு நோயாளிகளுக்கு  சிறந்தது.
 
வெந்தயம் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதாலும் அதில் பொட்டாசியம் அதிகம் இருப்பதாலும் இதய நோய் அல்லது இதய பிரச்சனைகள் வர  வாய்ப்பில்லை.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments