Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடி கொட்டும் பிரச்சனையிலிருந்து விடுபட குறிப்புகள்...!!

Webdunia
ஆவாரம் பூ 100 கிராம், வெந்தயம்-100 கிராம், பயத்தம்பருப்பு அரை கிலோ ஆகியவற்றை கலந்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் கரைத்து வாரம் இருமுறை தலைக்கு அலசி வர, கருகருவென கூந்தல் வளரும்.
ஆவாரம் பூ, செம்பருத்தி பூ, தேங்காய் பால் தலா ஒரு கப் எடுத்துக் கொண்டு, வாரம் ஒரு தடவை அரைத்துத் தலைக்குக் குளியுங்கள். உடல் குளிர்ச்சியாகி, முடி கொட்டுவது உடனடியாக நின்று கூந்தலும் வளரத் தொடங்கும்.
 
ஒரு பிடி ஆவாரம் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி, தலைக்கு குளிக்கும்போது கடைசியில் இந்த தண்ணீரில் ஒரு எலுமிச்சம்பழத்தை பிழிந்து விட்டு தலையில் விட்டுக் கொள்ளுங்கள். உடம்பு பொன்நிறமாவதுடன், புத்துணர்ச்சியும் கிடைக்கும்.
100 கிராம் ஃபிரெஷ் ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்குங்கள். இதை அடுப்பில் வைத்து நீர் பதம் போகும் வரை காய்ச்சுங்கள். இதனுடன்  கால் கிலோ தேங்காய் எண்ணெய் கலந்து கொள்ளுங்கள். இதை முன் நெற்றியில் தினமும் நன்றாகத் தடவி வந்தால், முடி உதிர்வது ஒரே  மாதத்தில் நிற்பதோடு, வழுக்கை ஏற்படாமலும் தடுக்கும்.
 
ஆவாரம் பூவை அரைத்து ஜூஸாக்கி, ஓசை வரும் வரை காய்ச்சி, 100 கிராம் பாதாம் ஆயிலைக் கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெய்யை கருமை படர்ந்த இடங்களில் குளிப்பதற்கு முன்பு தடவி வர, ஓரிரு வாரத்தில் கருமை காணாமல் போய் வரி, சுருக்கம் ஆகியவையும்  மறைந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மண் பாணை தண்ணீர் எப்படி குளிர்ச்சியாகிறது என்பது தெரியுமா? இதோ விளக்கம்..!

எப்போதும் உடல் சோர்வுடன் உள்ளதா? இதெல்லாம் காரணமாக இருக்கலாம்..!

பார்லருக்கு போகாமல் முகத்தை பொலிவாக வைத்து கொள்வது எப்படி? எளிய ஆலோசனைகள்..!

வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாத பெண்களுக்கு சில எளிய வழிமுறைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments