Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்க உதவும் இயற்கை மருத்துவம்!

Webdunia
சிலருக்கு முகத்தில் எண்ணெய் அதிகம் வழியும். அத்தகையவர்கள் கடலை மாவைக் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால், சருமத் துளைகள் இறுக்கப்பட்டு, முகத்தில் எண்ணெய் அதிகம் வழிவது தடுக்கப்படும். கடலை மாவு இயற்கைப் பொருள் என்பதால், எந்த வகையான சருமத்தினரும் இதனைப் பயன்படுத்தலாம்.

 
எண்ணைத் தன்மை கொண்ட சருமத்தை உடையவர்கள் வெள்ளரிக்காய் சாறு, எலுமிச்சம் பழச்சாறு, தக்காளிச்சாறு  ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கலந்து சிறிதளவு தேனும் சேர்த்து உடலில் பூசலாம்.
 
கோடையில் ஏற்படும் உடல் சூட்டைத் தவிர்க்கவும், வெயிலில் சருமம் கறுக்காமல் இருக்கவும், பொலிவைக் கொடுக்கவும் 1  தேக்கரண்டி முட்டை கோஸ் சாறு, 1 தேக்கரண்டி ஈஸ்ட் மற்றும் 1 தேக்கரண்டி தேன் ஆகியவற்றை கலந்து முகம், காது  பகுதிகளில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவினால் தோல் வறட்சி நீங்கும்.
 
பேக்கிங் சோடாவை சிறிது எடுத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில்  தடவி 5-10 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், முகத்தில் இருக்கும் பிம்பிள்  நீங்குவதோடு, எண்ணெய் பசையும் கட்டுப்படுத்தப்படும்.
 
தினமும் பப்பாளியை சிறிது அரைத்து, முகத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து கழுவி வர, முகத்தில் எண்ணெய் வழிவது  தடுக்கப்பட்டு, முகம் பிரகாசமாக இருக்கும்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

தமிழ்நாட்டில் பரவும் ஸ்க்ரப் டைபஸ் (Scrub Typhus) தொற்று! அறிகுறிகள் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments