Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுநீரகம் தொடர்பான நோய்களுக்கு குணம் தரும் சிறுநெருஞ்சி....!

Webdunia
நெருஞ்சிலின் இலை, பூ, காய், வேர் அனைத்துமே மருத்துவக் குணம் நிறைந்தவை. சாலையோரங்களிலும் தரிசு நிலங்களிலும் இது செழித்து வளரக்கூடியது. இதில் மூன்று வகைகள் உண்டு. 1. சிறுநெருஞ்சில், 2. செப்பு நெருஞ்சில், 3. பெரு நெருஞ்சில் (யானை நெருஞ்சில்).
மஞ்சள் நிற மலர்களையுடையது சிறு நெருஞ்சில். சிறு நெருஞ்சில் ஏராளமான நோய்களைக் குணப்படுத்தக்கூடியது. இதில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் நிறைந்துள்ளது. இதன் வேரை எலுமிச்சைப் பழத்தின் சாறு விட்டு அரைத்துக் குடித்து வந்தால் உரிய  வயதில் பூப்பெய்தாத பெண்களுக்குத் தீர்வு கிடைக்கும். 
 
நெருஞ்சில் இலைகள் 50 கிராம் எடுத்து, அரை லிட்டர் தண்ணீர் விட்டுப் பாதியாகும் அளவு காய்ச்சி, தினமும் காலையில் அருந்தி வந்தால் பெண்களின் கர்ப்பப்பைக் கோளாறுகள் நீங்குவதுடன்  குழந்தைப்பேறு உண்டாகும். 
 
நெருஞ்சில் செடியை நிழலில் உலர்த்திச் சூரணம் செய்து இரண்டு கிராம் அளவு, பாலுடன் கலந்து காலை மாலை இரண்டு வேளையும் குடித்து வந்தால் வெட்டை நோய் குணமாகும்.
 
நெருஞ்சில் முள்ளைப் பசும்பாலில் வேகவைத்து உலர்த்திப் பொடியாக்கி இரண்டு கிராம் அளவு எடுத்துப் பாலுடன் சேர்த்து காலை மாலை இரண்டுவேளை குடித்து வந்தால் உடல் பலம் பெறுவதுடன்  தாம்பத்யப் பிரச்னைகள் தீரும். 
 
நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்துக் காய்ச்சி வடிகட்டித் தேன் சேர்த்துக் குடித்து வந்தால் ஆண்மை அதிகரிக்கும். 
 
நெருஞ்சில் முள்ளை தண்ணீர் விட்டுக் கஷாயமாக்கிக் குடித்து வந்தால் சிறுநீரகம் தொடர்பான நோய்கள் குணமாகும். குறிப்பாக, சிறுநீரகக் கல்லைக் கரைத்து சிறுநீர் தடையின்றி போகச் செய்யும்.  கர்ப்பிணிகளுக்கு வரும் சிறுநீர்ப் பிரச்னையையும் இது குணமாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் காலத்தில் உடல் பாதுகாப்புக்கு பயன் தரும் வெங்காயம்..!

மூத்த குடிமக்களுக்கு பின்ஹோல் பியூப்பிலோபிளாஸ்டி மூலம் சிகிச்சை! - டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை!

`அல்சைமர்' எனும் மறதிநோய்.. இந்த நோயை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

வாய்வு வெளியேறும் போது சத்தம் வருவது ஏன்?

வெயில் காலத்திற்கேற்ற நன்னாரி சர்பத்.. சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments