Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்ட கொலஸ்ட்ரால் அளவை சரிசெய்ய உதவும் உணவுகள் !!

Webdunia
உடலில் சேரும் அதிக கொழுப்பு, ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்றவற்றிற்கான அபாய அளவினை அதிகரிக்கிறதாம்.

‘ஹைப்பர்கொலஸ்ட்ரோலெமியா’ என்கிற மருத்துவப் பெயரால் அழைக்கப்படும் அதிகப்படி கொலஸ்ட்ரால், ரத்தக்குழாய்களில் எக்கச்சக்கமாக கொழுப்பு மற்றும் எடைகூட்டும் பொருட்கள் சேர்வதால் ஏற்படுகிறது. இதனால் உடல் ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
 
ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளுகன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்ககூடிய திறன் கொண்டது. 
 
பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தை பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக் கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை. 
 
பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மை கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.
 
பூண்டில் இருக்கும் மருத்துவகுணம் உடலின் கொழுப்பை குறைக்கும் சக்தி வாய்ந்தது என்கின்றன அறிவியல் ஆய்வுகள். பூண்டில் இருக்கும் அல்லிசின் என்னும் வேதிப்பொருள், உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது. 
 
பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. சிவப்பு ராஸ்பெரிஸ், இனிப்பு செரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி ஆகியவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக் கூடியவை என்கிறது ஆய்வொன்று. ஆன்டிஆக்சிடண்ட் நிறைந்த இவற்றை டயட்டில் சேர்த்துக்கொள்வது நல்லது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

உயர் ரத்த அழுத்தத்தை தவிர்க்க செய்ய வேண்டிய 4 விஷயங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments