Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உடல் எடையை குறைப்பதில் உதவும் வெந்தய டீ !!

Webdunia
தொப்பையை குறைக்க வெந்தய கீரையை டீ போன்று காலை வேளையில் குடித்து வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.


வெந்தய கீரை எண்ணற்ற மூலிகை குணம் இந்த செடியில் உள்ளது. வெந்தயத்தில் இருப்பது போலவே இதன் கீரையிலும் பலவித நன்மைகள் உள்ளது.
 
பொதுவாக உடல் எடையோ அல்லது தொப்பையோ கட்டுக்கடங்காமல் பெருகி கொண்டே போனால் அதற்கு மூல காரணம் உங்களின் செரிமான மண்டலம் சீராக வேலை செய்யவில்லை என்று அர்த்தம். எனவே, முதலில் நாம் இதை சரி செய்ய வேண்டும். இதற்கு தேவையான பொருட்கள்: தேன் 1 ஸ்பூன், வெந்தயம் 1 ஸ்பூன், தண்ணீர் 1 கப்.
 
தயாரிப்பு முறை: முதலில் நீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொண்டு அதில் 1 ஸ்பூன் வெந்தயத்தை சேர்க்கவும். இதை 5 முதல் 8 நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு மிதமான வெப்பத்திற்கு வந்ததும் இதை வடிகட்டி அதில் தேன் கலந்து 14 நாட்கள் தொடர்ந்து காலையில் குடித்து வரலாம்.
 
பயன்கள்:
 
இந்த வெந்தய டீ செரிமான பிரச்சனைகளோடு உடலில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலையும் படிப்படியாக குறைத்து விடும். இதனால் இதய பாதிப்புகள் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம். மேலும், இரத்த நாளங்களில் உண்டாக கூடிய அடைப்புகளையும் இந்த டீ ஏற்படாமல் பார்த்து கொள்ளும்.
 
ஆண்களின் ஹார்மோன் பிரச்சினை முதல் உடல் எடை குறைப்பு வரை, வெந்தயத்தை பயன்படுத்தலாம். கொழுத்து போன தொப்பையை மிக எளிதாக குறைக்க வெந்தய கீரை போதும். இதை தயாரிக்க தேவையான பொருட்கள் வெந்தய கீரை 1 கைப்பிடி மஞ்சள் கால் ஸ்பூன் தண்ணீர் 200 மி.லி
 
வெந்தய கீரை டீயை காலையில் குடித்து வந்தால் தொப்பையுடன் சேர்த்து உடல் எடையும் குறையும். இந்த டீயை தொடர்ந்து 1 மாத காலம் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைந்து விடும். அத்துடன் உடலில் உள்ள கொழுப்புகளையும் இது நீக்கி விடும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளூரில் சீண்டப்படாத நுங்கு.. மதிப்பு தெரிந்து வாங்க போட்டிப் போடும் வெளிநாட்டினர்!

மார்பகப் புற்றுநோய்க்கு ஒரே மருந்து! ஒரே தவணையில்!! உடனடி நிவாரணம்,,!

கண் பார்வை இல்லாத பெற்றொருக்கு பிறக்கும் குழந்தைக்கு கண் பார்வை பாதிக்குமா?

சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்க்குரு பிரச்சனை அதிகம் வருமா?

ஞாபக மறதி நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும்?

அடுத்த கட்டுரையில்
Show comments